அமைச்சர்களே, உங்களுடையப் பிள்ளைகள் தேசியப்பள்ளியில் படிக்கிறார்களா?, லிம் கேட்கிறார்

 

UMNO Assemblyஅமைச்சர்கள் தங்களுடைய பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் தேசிய கல்வி அமைவுமுறையின் கீழ் பயின்றவர்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.

கல்விக்காக பெருஞ்செலவு செய்யும் நாடு என்ற வசைப்பெயரைப் பெற்றிருந்த போதிலும் நாட்டின் அரசாங்கம் மற்றும் அரசியல் தலைமைத்துவம் இந்நாட்டின் தேசிய கல்வி அமைவுமுறையில் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்றாரவர்.

“(இதில்) அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் அடங்குவர். அவர்களின் குழந்தைகள் தேசிய கல்வி அமைவுமுறையிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்”, என்று இன்று விடுத்த அறிக்கையில் அவர் கூறுகிறார்.

மலேசிய இளைஞர்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் குழந்தைகளை விட சிறப்பான கல்வியைப் பெறுகின்றனர் Kit Siangஎன்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறிக்கொண்டதை அம்னோ தலைவர்கள் மற்றும் பேராளர்களும் கூட நம்பவில்லை என்று லிம் கூறினார்.

அம்னோ பொதுப் பேரவை மற்ற நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடுகையில் மலேசிய மாணவர்கள் ஏன் மோசமாக இருக்கின்றனர் என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து, சீனமொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்பது போன்ற இனவாத நாடகம் நடத்துவதையும் கூக்குரலிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.