குறிப்பிட்ட மருந்துகளுக்கு மட்டுமல்லாமல் எல்லா வகை மருந்துகளுக்கும் பொருள், சேவை வரியிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என டிஏபி-இன் சிபு எம்பி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இப்போதுள்ள முறைப்படி வரி விதிக்கப்பட்ட மருந்துகளையும் வரியற்ற மருந்துகளையும் பிரித்துப் பார்ப்பது மருந்தகங்களுக்கு சிரமமாக இருக்கும்.
“அரசாங்கம் 4வது பதிப்பாக வெளிவந்துள்ள தேசிய அத்தியாவசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்துள்ளது.
“அதில் இடம்பெற்றுள்ளவை 13 விழுக்காட்டு மருந்துகள்தாம். எஞ்சிய 87 விழுக்காட்டுக்கு 6விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படும்”, என்றாரவர்.
ஆளும் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு பிரச்சனை வரும் பொழுது நமக்கு சாதகமாக நாடாளும் மன்றத்தில் குரல் எழுப்ப மறந்து விட்டார்கள்,ஆதலால் நாமும் இனி வரும் மக்கள் தேர்தலில் அவர்களை மறப்போம் அப்பொழுதுதான் தெரியும் மக்களின் வலி,மதிப்பு என்ன வென்று.
நல்ல கருத்து மலேசியன்
என்ன சொன்னாலும் எடுபடாது