மஇகா தலைவர் ஜி.பழனிவேல் தம் நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்குப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தாம் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுவதை மறுக்கிறார்.
நேற்று பகாங் ஆட்சியாளர் சுல்தான் அஹ்மட் ஷா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாக அவர் இவ்வாறு கூறினார்.
“அவர் என்ன செய்தார்? ஒன்றுமே இல்லை……இதுபோன்ற பேரிடர் ஏற்படும்போது மக்கள்தான் துன்பப்படுகிறார்கள்.
“கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் அவருக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். இதுதான் அவர் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறா?”,என்று சுல்தான் நேற்று கடிந்து கொண்டார்.
அதற்குப் பதிலுரையாக பழனிவேல் அவ்விவகாரம் ஆழமாக ஆராயப்பட வேண்டியது என்றும் யாரையும் குற்றம் சொல்வதில் பயனில்லை என்றும் சொன்னார்.
“நான் எம்பியாக தேர்ந்தெடுக்கப்படும் முன்னரே பல விசயங்கள் நடந்திருக்கின்றன.
“ஆனாலும், கேமரன் மலைக்கு ஏற்பட்டுள்ள பேரழிவைத் தடுத்து அதற்கு மறுவாழ்வளிக்க முடியும்”, என்றார்.
சுல்தானுடன் தமக்கு நல்லுறவு உண்டு என பழனிவேல் கூறினார்.
“நல்லது கெட்டது எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துரைப்பேன். சுல்தான் மாநிலத்தின்மீதும் மக்களின்மீதும் உன்மையிலேயே அக்கறை உள்ளவர். அவர்களின் நலன் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார்”, என்றாரவர்.
மிகப் பெரிய நாடகத்தில் தலைவரு வில்லன் ஆயிட்டாரு. பாவம்.
அவர் என்ன செய்தார் …. ஒன்றுமே இல்லை! என்று இப்போது சுல்தானும் பேச ஆரம்பித்து விட்டாரா! பெரியார் போற்றி! போற்றி!
அடடா, என்னா பக்குவமாக தூக்குகின்றார் நம்ம தலைவர்!. கடந்த 30 வருடமாக அந்த மலையில் காட்டு மரங்களை வெட்டி எடுத்து காட்டை அழித்த பெருமை இப்ப பச்ச பிள்ளையாட்டும் பேசும் களவாடித் தலைவர்களையேச் சாரும். கிளந்தானில் காட்டை அழிப்பதை அன்றாடம் படம் போட்டுக் காட்டிய அதே TV3-ல் இந்த கேமரன் மலை காடு அழிக்கப் படுவதை சில வருடங்களுக்கு முன்னர் காராம் சிங்கு போட்டுக் காட்டியப்ப இவனங்க எல்லாம் தூங்கிகிட்டு இருந்தானுங்களா?. இப்ப மட்டும் இந்த வாயில்லாப் பூச்சியை இப்படி மென்று துப்புவது நியாயமோ?. பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று தமிழன் பழமொழியை தெரிஞ்சுதான் சொல்லி வச்சிருக்கான்.
ஒரு வகையில் நம்மவர் என்ற அனுதாபம் ஏற்ப்பட்டாலும் கடந்தமுறை கிடைக்கப்பெற்ற 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு என்ன செய்தீர்கள் என்றாவது சொல்லலாம் அல்லவா? அதுவும் போகட்டும் ஏன்? கேமரன் மலையில் உள்ள இந்தியர் சம்மந்தப்பட்ட ஆலயங்கள், பொது இயக்கங்கள் நிதிக்கேட்டு வந்தால் உங்கள் பி.ஏ, பழனி அப்பன் . தான ராட்டா பாரிசான் அலுவலகத்தில் பணியாற்றும் திருமதி இந்திரா நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஓட்டு போடவில்லை அப்புறம் எப்படி உதவி கேட்டு வருகிறிர்கள் என சல்லென்று விளுகின்ற்றார்கள் ஏதோ அவங்க அப்பன் வீட்டு பணத்தை எடுத்துக் கொடுப்பதை போல!! அடுத்த முறை எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்க வருவிர்கள்.
மாண்புமிகு சுல்தான் அவர்களே,பழனிவேல் மட்டும் அல்ல அணைத்து பிரதிநிதிகளும் மக்கள் பிரச்னை கவனிப்பது இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தலை நீட்டுவார்கள் . அப்புறம் சுயநலம் . அதுதான் மக்கள் வேதனை.
சுல்தான் அவர்களே, கேமரன் மலை பிரச்னை இபோதுதான் உங்களுக்கு தெரியுதோ?
உண்மையை போட்டுடைத்தால் பலருக்கு கசக்கும். நான் பழனியை ஆதரிப்பவனல்ல. ஆனாலும் உண்மையை சொல்கிறேன். அரண்மனையிலிருந்து வெளியான ‘மஞ்சள்’ கடிதத்தை நான் பார்த்தவன். கேமரன் மலையை அழித்ததில் அந்த ‘மஞ்சள்’ காகிதத்திற்கு பெரும் பங்குண்டு. அக்காகிதம் அரண்மனையிலிருந்து வெளியானதால், மாநில ஆளுநர்[சுல்தான்] தார்மீக பொறுப்பேற்று, தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும். கேமரன் மலைக்கு பழனி வருவதற்கு முன்பே, பெரும்பாலான அரசாங்க லஞ்ச நாய்கள் முக்கால்வாசி காடுகளை அழித்துவிட்டன. எல்லா ஆதாரங்களுடன் மேல்மட்ட அதிகாரிகள் மீது [மாநில முதல்வர் உட்பட] பல போலீஸ் புகார்களை DAP சிம்மாதிரி[அப்பளசாமி] செய்திருந்தார். ஒரு நடவடிக்கையும் இல்லை. கேமரன் மலையில் நடக்கும் ‘கூத்துகளுக்கு’ முதலில் வெளிநாட்டவர் மீது பாய்ந்தனர். இப்போது ‘செத்த பாம்பு’ பழனி மீது பழியை போடுகின்றனர். அடுத்து? பழனி மீது பழியை போட்டு குழப்பம் ஏற்படுத்தும் மற்றொரு ஆசாமி, இத்தொகுதியில் உள்ள ஜில்லாய் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ வான் ரோச்டி. அடுத்த பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் அம்னோ சார்பில் இவர் போட்டியிட உள்ளார். ம.இ.கா.விற்கு இனி கேமரன் மலை இல்லை.
சொந்த தொகுதியில் ஒன்றும் கிழிக்க முடியாத தலைவர் மலேசியாவில் இருக்கும் அணைத்து இந்தியருக்கு என்ன செய்து கிழிக்க போகிறார்.ஊமை துறையை பற்றி கேள்வி பட்டு இருக்கின்றேன் ஆனால் ஊமை தலைவரை பற்றி கேள்வி பட்டது இல்லை .அந்த ஊமை தலைவரைஇப்பொழுது தான் நேரில் பார்க்கின்றேன்
இங்க பாரு எப்பவும் போல பேசாம இருந்திடு / மன்னரிடம் விளையாடாதே ,,,,,நாறி நாசமாயுடுவே
உண்மைதான். நீங்க மக்கள் பிரதிநிதியாக இருக்கும் கேமரன் மலையின் இந்த பேரிடருக்கும், பேரழிவுக்கும் உங்களை எப்படிக் குறை கூறலாம்? ஒபாமாவைத்தானே குறை சொல்லணும்? இருந்தாலும் கேமரன் மலைக்கு ‘மறு வாழ்வளிக்க (என்னால்) முடியும் என்று சொன்னது என்னை ரொம்பவும் கவர்ந்து விட்டது
முன்பு பொதுப்பணி துறையில் சாமிவேலு இருந்த போது எங்கே கல் விழுந்தாலோ, குழி விழுந்தாலோ சாமிவேலுதான் என்னோமோ மலையில் இருந்து தள்ளி விட்டதாக சொன்னார்கள். இப்போது இளிச்சவாயன் பழனிவேலு, நல்லவேளை போக்குவரத்து அமைச்சராய் இல்லை, இருந்திருந்தால் M ஂ370 காணமல் போனதற்கும் M 17 விழுந்தர்க்கும் பழனிவேலு தலை உருண்டிருக்கும், umno காரன் MP யிருக்கும் தொகுதியில் வெள்ளம் வராது, மழை பெய்யாது, கண்டவன் பேச்சைக் கேட்டு குறை சொன்னால் எப்படி? MIC காரன் என்றல் இவங்களுக்கு இளக்காரமா? யாரை சொல்லி என்ன அவ போது, நம்மிடையே தான் MIC யை குறை சொல்லத்தான் நாதாரிகள் இருக்க அடுத்தவனை சொல்லமுடியுமா?
அட சி, வெது வெது
30 தடவை சபரி மலை ஏறியவர் என்பது சுல்தானுக்கு தெரியாது. ஆனால் கேமரான் மலையில் மழை இப்படி பேயும் என்றும் தண்ணீர் இப்படி வரும் என்றும் எந்த மலையாண்டியும் சொல்ல வில்லையாம்.DAP மனோகரன் தின குரலில் எழுதுகிறார் இவருக்கு தமிழ் நாளிதழ் படிக்க பிடிக்காதே ? இரவில் குளிரும் என்று பார்லிமெண்டில் சொன்னார். சுற்றுல்லா அமைச்சருடன் போவாராம். அப்போது மல்லிபபூ பூக்குமாம்.
நல்லவேளை M 370 காணமல் போனதற்கும் M 17 விழுந்தர்க்கும் பழனி வேலுதான் பதில் சொல்லவேண்டும் என்று சொல்லாமல் விட்டார்களே!
தமிழவன் உங்கள் எனக்கு பிடிச்சிருக்கு.
ஏன் நஜிப் பாஹங் மாநிலத்தை சேர்ந்தவர்தானே அவரை கேட்க்க வேண்டியத்துதானே? தமிழன் என்றல் இளிச்சவயான?
ஐ லைக் கும்கி கருத்து ..
ஊருக்கு இளைதவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாம்! மாயிகா காரர்களுக்கும் சுல்தானுக்கும் இளைத்தவர் நம்ம பழனிவேல்தான்.
கொளவி சரியா சொன்னீர் தமிழன் என்றால் எல்லோருக்கும் இளிச்சவாயன் என்று நினைப்பு .அங்கே காலம் காலமாக காடுகளை அளித்து கொண்டிருகிறார்கள்,தொலைகாட்சியில் போட்டு உடைத்தார்கள்,பல எம் பிகள் அங்கு வந்து போய்விட்டார்கள் .இவர் வந்து 2 வருடம் கூட ஆகவில்லை இவர் மேல் பாய்ந்தால் என்ன அர்த்தம்.பிறகு அன்னியவர்கள் ஆக்கிரமிப்பு யார் காரணம்?மக்களா அவர்களுக்கு உரிமை கொடுத்தார்கள்?கேமரன் மலை வாழும் மக்களே நீங்கள் அங்கு இருக்கிற அந்நியர்களின் மீது காவல் துறையில் ஒரு புகார் மனுவை தாருங்கள்,கேமரன் மலை எம் பிக்கு ஒரு மனு,பிரதமருக்கு ஒரு மனு மற்றும் மாநில சுல்தான் அவர்களுக்கு ஒரு மனு பிறகு பாருங்கள் என்ன நடக்கிறது என்று.
இவர் வந்து 2 வருடம் ஆனால் என்ன…2 மாதங்களே மட்டும் ஆனால் தான் என்ன? இவர் கேமரன் மலையைப்பற்றி முழுவதுமாக படித்து முடிக்க 10 வருடங்கள் ஆகலாம். அதற்காக 10 வருடங்கள் கழித்துத்தான் இவர் செயலாற்ற முடியும் என்று கூறலாமா? அந்த அமைச்சும் அதன் அதிகாரிகளும் , அதன் கோப்புகளும் அங்கேதானே இருக்கிறது. அதை என்றைக்காவது தூசி தட்டியிருப்பாரா? அல்லது சுற்றிப்பார்க்கும் நோக்கத்திலாவது இந்த 2 வருட காலத்தில் இவர் கேமரன் மலைக்குப் போயிருப்பாரா? அப்படிப் போயிருந்தாலாவது கேமரன் மலை எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் கூட அது எங்கே இருக்கிறது என்றாவது தெரிந்திருக்குமே. பாரதியார் சிறந்த விஞ்ஞானி என்று சொன்னவர் தானே உங்க தமிழ்த் தலைவர். நம் சமுதாயத்தில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள்….எத்தனையோ சவால்கள்..! அவற்றை இவர் தட்டிக்கேட்டிருக்க வேணாம்…அதட்டியும் கேட்டிருக்க வேண்டாம் குறைந்த பட்சம் குரலாவது எழுப்பியிருக்கலாமே? அது கூட முடியவில்லையா? எப்படி முடியும்? ம.இ.கா வின் தேசியத் தலைவராக வந்ததும் புற வழியில்…? – சாமிவேலு வித்துப்போனதால்! அமைச்சர் பதவி பெற்றதும் அதே வழியில்..! – உம்னோவின் கைங்கரியத்தால்! பின்னர் கடந்த தேர்தலில் (ம.இ.கா மற்றும் பொதுத் தேர்தல்) இவர் வென்ற கதை ஊரறிந்தது தானே…? எம். எஹ் 370 காணாமல் போனதற்கு இவரைக் குறை சொல்ல யாரும் இங்கே உங்களைப் போல கருத்துக் குருடர்கள் இல்லை. இந்தப் பிரச்சினை கேமரன் மலையைப் பற்றி…பழனியின் கை______காத் தனத்தைப் பற்றி…அதைப் பற்றி மட்டும் பேசுவோம். அடுத்து, அங்கு இருக்கிற அந்நியர்களின் மீது காவல் துறையில் ஒரு புகார் மனுவை தாருங்கள்,கேமரன் மலை எம் பிக்கு ஒரு மனு,பிரதமருக்கு ஒரு மனு மற்றும் மாநில சுல்தான் அவர்களுக்கு ஒரு மனு பிறகு பாருங்கள் என்ன நடக்கிறது என்று’ என்று ஒரு கருத்து. மனு கொடுத்தால் என்ன நடக்கும்? கத்தை கத்தியாகப் பிடுங்கி விடுவார்களா…அல்லது பிடுங்கி கத்தைக் கட்டி விற்பார்களா – கேமரன் மலையில் முளைக்கும் புற்களை…?
ஐயா கைலாசமலை! எந்தப் புகார் செய்தும் பிரயோஜனமில்லை. டப் சிம்மாதிரியின் அலுவலகத்தில் கத்தை கத்தையாய் போலீஸ் புகார்களின் நகல்கள் உள்ளன. சுல்தான் அலுவலக அலுவலர்களின் மீதே ‘மஞ்சள் காகிதம் ‘ தொடர்பாக போலீஸ் புகார் செய்துள்ளார் என்றால் பாருங்களேன். ஒரே வழிதான். ஹிரோஷிமா-நாகாசாக்கியில் போட்ட அனுகுண்டைப்போல் கேமரன் மலையில் போட்டு, மலையை ‘ராத்தா’ வாக்கினால், தீர்ந்தது பிரச்சினை.
இவர் வந்து 2 வருடம் ஆனால் என்ன…2 மாதங்களே மட்டும் ஆனால் தான் என்ன? இவர் கேமரன் மலையைப்பற்றி முழுவதுமாக படித்து முடிக்க 10 வருடங்கள் ஆகலாம். அதற்காக 10 வருடங்கள் கழித்துத்தான் இவர் செயலாற்ற முடியும் என்று கூறலாமா? அந்த அமைச்சும் அதன் அதிகாரிகளும் , அதன் கோப்புகளும் அங்கேதானே இருக்கிறது. அதை என்றைக்காவது தூசி தட்டியிருப்பாரா? அல்லது சுற்றிப்பார்க்கும் நோக்கத்திலாவது இந்த 2 வருட காலத்தில் இவர் கேமரன் மலைக்குப் போயிருப்பாரா? அப்படிப் போயிருந்தாலாவது கேமரன் மலை எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் கூட அது எங்கே இருக்கிறது என்றாவது தெரிந்திருக்குமே. பாரதியார் சிறந்த விஞ்ஞானி என்று சொன்னவர் தானே உங்க தமிழ்த் தலைவர். நம் சமுதாயத்தில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள்….எத்தனையோ சவால்கள்..! அவற்றை இவர் தட்டிக்கேட்டிருக்க வேணாம்…அதட்டியும் கேட்டிருக்க வேண்டாம் குறைந்த பட்சம் குரலாவது எழுப்பியிருக்கலாமே? அது கூட முடியவில்லையா? எப்படி முடியும்? ம.இ.கா வின் தேசியத் தலைவராக வந்ததும் புற வழியில்…? – சாமிவேலு விட்டுப்போனதால்! அமைச்சர் பதவி பெற்றதும் அதே வழியில்..! – உம்னோவின் கைங்கரியத்தால்! பின்னர் கடந்த தேர்தலில் (ம.இ.கா மற்றும் பொதுத் தேர்தல்) இவர் வென்ற கதை ஊரறிந்தது தானே…? எம். எஹ் 370 காணாமல் போனதற்கு இவரைக் குறை சொல்ல யாரும் இங்கே உங்களைப் போல கருத்துக் குருடர்கள் இல்லை. இந்தப் பிரச்சினை கேமரன் மலையைப் பற்றி…பழனியின் கை______காத் தனத்தைப் பற்றி…அதைப் பற்றி மட்டும் பேசுவோம். அடுத்து, அங்கு இருக்கிற அந்நியர்களின் மீது காவல் துறையில் ஒரு புகார் மனுவை தாருங்கள்,கேமரன் மலை எம் பிக்கு ஒரு மனு,பிரதமருக்கு ஒரு மனு மற்றும் மாநில சுல்தான் அவர்களுக்கு ஒரு மனு பிறகு பாருங்கள் என்ன நடக்கிறது என்று’ என்று ஒரு கருத்து. மனு கொடுத்தால் என்ன நடக்கும்? கத்தை கத்தையாகப் பிடுங்கி விடுவார்களா…அல்லது பிடுங்கி கத்தைக் கட்டி விற்பார்களா – கேமரன் மலையில் முளைக்கும் புற்களை…?
கை ஆல் ஆகத இவன் வாங்கற துட்டுக்கு ஒரு அளவுக்கு வேல செஞ்சிருக்கணும் அப்ப எல்லோரும் மதிப்பாங்க, வெள்ளம் வந்து பிரச்னையான உடனே அங்க போய் எதாச்சும் செஞ்சி டிவி, ரேடியோ செய்தி, நாளிதழ் பேட்டி அப்படி இப்படின்னு, பாதிக்க பட்ட மக்களுக்கு உணவு உடை தங்கும் இடம் செலவுக்கு பணம் எதாவது செஞ்சி பேரெடுத்து இருக்கனும், ஒன்னுமே இல்ல புடுங்கருதுக இவன் இருக்கான் ???????? பொது மக்கள் துப்பும் பொழுது கொஞ்சமாவது சொறன வந்து இருக்கனும்
எப்படி அந்நிய நாட்டவர்கள் அங்கு வந்தார்கள் என்பது குடி நுழைவு ஈலாகவுக்குதானே தெரியும் .
தகுந்த வேலை பெர்மிட் உள்ளதா என்பது பழனிக்கு தெரியுமா .
பல ஆண்டுகளாக அந்நியர்கள் அங்கே விவசாயம் செய்கிறார்கள் .
கடந்த 2013 தேர்தலில்தான் திரு பழனி அங்கு எம்பி .
குடிநுழைவு என்போர்செமென்ட் என்ன நடவடிக்கை எடுத்தது .
பிரச்னை வரும் போது திரு பழனி மேல் பழி போடுவது என்னய்யா நியாம்????????
நான் ஒன்றும் மாயீகா ஆள் இல்லை .
பாவம் பழனிவேலுவால் ஒன்னும் செய்ய முடியாதுங்க. ஏன்னா எல்லா அரசாங்க துறைகளிலும் யார் வேலை செய்யறாங்க.அவங்களுக்கு தெரியும் யாரோட பேச்சை கேட்கணும் கேட்க்ககுடாதுநு அப்புறம் எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அவர்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாதுன்னு அப்புறம் ஏன் வெட்டிப்பேச்சு ///
உறக்கம் களைந்து பேசுகிறார் ! நீங்கள் கவலை படாமல் பதவியை இறுக பிடித்து கொள்ளுங்கள் !
முன்பு சாமிவேலு அவர்கள் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தபோது, matrade கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை என்று பல அம்நோவாதிகள் கூச்சலிட்டனர். அதற்க்கு அவர் தந்த பதில் ‘அதற்கான காரணத்தை நான் பிரதம மந்திரியிடம் கூறிய பின்பு, அவை பொதுவாக அறிவிக்கப்படவேண்டும் என்று பிரதம மந்திரி அவர்கள் ஒப்புதல் தெரிவித்தால், நான் அக்காரணங்களை பகிரங்கமாக சொல்வேன்’ என்று .அதன் பிறகு எவனும் வாயையை திறக்கவே இல்லை. அதனால் அந்த காரணங்கள் அவருக்கும் அன்றைய பிரதம மந்திருக்கு மட்டுமே தெரிந்து மூடப்பட்டுவிட்டது. இன்று பழனிவேலுவுக்கு அந்த தைரியம் உண்டா? ஞாயம் நம்மிடம் இருந்தால் பயம் எதற்கு? போட்டு உடையுங்கள் உண்மையையை. குட்ட குட்ட குனிந்து போவது மடமை. நீதியோடும் தர்மத்தோடும் செயல்படுவது நமது கடமை. நம் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக
இவ்விடையத்துக்கு ….
முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர் ….
தேவமணி அவர்கள் ….
விடை அளிப்பாரா ??
பழனிவேலு ……….. மட்டும்தான் சேவை செய்வா…………..
நான் நினைக்கிறேன் ஆசாமியும் மோகனும் ஒருவரே, எழுத்தில் திமிர், ஆணவம், அகம்பாவம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு.
அன்று பாலம் விரசல் சாமிவேலு பொறுப்பு , இன்று வெள்ளம் பழனிவேல் பொறுப்பு. இளிச்சவாயன் தமிழன். அம்ம்னோகரன் புத்திசாலி.
பழனிவேலு துப்பு கேட்ட …………….உனக்கு பதவி ஒரு கேடா……………….