திரங்கானு, புக்கிட் பிசியில் இயங்கும் ஒரு சீன சுரங்க நிறுவனம் அச்சுரங்க வேலைகளைச் சுலபமாக்குவதற்காக பிஎன் அரசியல்வாதிகள் டத்தோ பட்டங்கள் பெறுவதற்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளது.
சிஎஎ ரிசோர்ஸ்சஸ் என்ற நிறுவனத்தில் தலைமை செயல்முறை அதிகாரி லி யாங் அந்நிறுவனத்துடன் மறைமுகமான தொடர்புடைய அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் யுஸ்$100,000 (ரிம336,501.90) கொடுத்துள்ளதாக நியுயோர்க் டைம்ஸ்சிடம் கூறினார்.
அச்செய்தி அறிக்கையின்படி, சீனாவிலுள்ள செல்வச் செழிப்புமிக்க இரும்புத் தொழிலதிபரின் 27 வயது மகனான லி, அரசியல்வாதிகள் மற்றும் அரச குடும்பத்தினர் ஆகியோருடன் உறவுகளை வளர்த்துக்கொள்ளும் அவரது திட்டப்படி இதனைச் செய்தாக கூறினார்.
“இவ்விரு தரப்பினரின் ஆதரவு இருந்தால், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஏனென்றால் இயற்கைவளங்கள் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது”, என்று லி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அந்த யுஎஸ் நாளிதழின் கூற்றுப்படி, மலேசியாவில் பின்பற்றப்படும் சர்வசாதாரணமான வழக்கத்தையே தாம் பின்பற்றியதாக லி மேலும் கூறினார்.
மோசமான தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் தரம்
சிஎஎ மலேசியாவில் இருக்கிறது ஏனென்றால் கடந்த மாதம் பெய்ஜிங் (சீனா) தொழில்துறையில் தொழிலாளர் உரிமைகளின் தரம், சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லுறவு போன்றவற்றை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தது என்று அச்செய்தி கூறுகிறது.
புக்கிட் பிசியில், தொழிலாளர்கள் சம்பந்தமாக எழக்கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்கும் பொருட்டு தொழிற்சங்க உறுப்பினர்கள் அல்லாத கம்போடியா, மியன்மார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தொழிலாளர்களை சிஎஎ வேலைக்கு அமர்த்துகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தொழிலாளர்கள் 12 மணி நேர பணிமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு நாட்கள் வேலை செய்ய வேண்டும். அச்சுரங்க நிறுவனம் பெறும் வருமாணத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது என்று லீ தெரிவித்ததாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
அலுவலகப் பணியாளர்கள், கணக்கியலர்கள் மற்றும் பொறியிலாளர்கள் உட்பட, சீனாவிலிருந்து கொண்டுவரப்படுகின்றனர்.
சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டியதைத் தவிர்ப்பதற்காக சிஎஎ சுரங்கத்தை இரண்டாகப் பிரித்துள்ளது, ஒவ்வொன்றும் 500 ஏக்கருக்கும் குறைவானது.
ஒரு காலத்தில் புக்கிட் பிசி சுரங்கம் உலகின் மிகப் பெரிய சுரங்கமாக விளங்கியது. இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானிய எஃகுத் தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருளை அளித்தது. அது 1971 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.
இது என்னடா புது கதை?
சாந்தி இதற்கு என்ன கதை சொல்ல போகிறீர். எல்லாம் உங்க bn தனே
இளைஞன் பார்வையில் கோளாறோ. BN இழுக்காமல் தூக்கம் வராதோ?
இவர்கள் இப்படிதான் கும்கி. அதிலும் சீனன் சம்பந்தப்பட்ட விஷயம் தான்
அதிகம். இவனுங்களே status போடுவனுங்கலாம் அப்புறம் இவனுங்களே
லைக் போட்டுக்குவானுங்கலாம். இதுல புதுசா சீனா காரன் வேறு இப்போ.
DAP என்னென்னமோ பண்ண பாக்குறான்.
இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. இதைப்பற்றி நாம் அதிகம் கேள்வி கேட்டால் அதை ஒரு இஸ்லாமிய பிரச்சனையாக்கி விடுவார்கள்! எல்லாம் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் தான்! பெரியார் போற்றி! போற்றி!
இங்குள்ள அரசியல் நிலை, மலாய்க்கார அரசியல்வாதிகளின் தகுதி குறித்து ஒரு அயல் நாட்டுக்கார சீனன் புரிந்துக்கொண்ட அளவுக்கூட நம்மவர்கள் புரிந்துக்கொள்ளவில்லையே, என்பதனை அறிய வேதனையாக இருக்கிறது. இன்று மட்டுமல்ல சுதந்திரத்திற்கு முன்பே இந்த நிலை தான். அன்றே நம்மவர்களுக்கு பாடித்தான் வைத்தார்கள், ஆடுற மாட்டை ஆடி கரக்கனும்னு, ஆனால் அதை புரிஞ்சிக்க பக்குவமில்லா நாம் எல்லாத்தையும் கோட்டை விட்டு விட்டோம். நாடு சுதந்திரத்தின் போது நாடோடி மன்னன் படத்தில் ஒலித்த தூங்காதோ தம்பி, தூங்காதே என்ற பாடல் இந்நாட்டு தமிழர்களுக்காக பாடியது போன்று உள்ளது. ஆனால், தமிழர்கள் எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை . நமக்கு உதவ என்னம் உள்ளவர்கள் நெஞ்சில் உதைக்க என்றும் நம்மினம் தயங்குவதில்லை.
நாடோடி மன்னன் (1958)
தூங்காதே தம்பி… தூங்காதே…
தூங்காதே தம்பி… தூங்காதே…
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்
தூங்காதே தம்பி… தூங்காதே…
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
சிலர் அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்
தூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்…
போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
தூங்காதே தம்பி… தூங்காதே…
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி… தூங்காதே…
DATO’ பட்டத்தை “BUDAYA RASUAH 1 MALAYSIA” கொடுத்துத்தான் வாங்குகிறார்களா ?
ஓகே ! ஓகே ! “BUDAYA RASUAH 1 MALAYSIA” கொள்கைக்கு மாபெரும் வெற்றி !