ஜி, தினாஷாவின் பெற்றோர் சிலாங்கூரில் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து செய்தியாளர் கூட்டமொன்றில் குறைகூறிய சில நிமிடங்களுக்குப் பின்னர் அந்த இரண்டாம் படிவ மாணவி இறந்துபோனார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தினாஷாவுக்கு ,14, காய்ச்சல் அடித்ததால் தாயார் ஐ. உதயபவானி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
இரவு மணி 8.30 அளவில், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
“நள்ளிரவில் தலை வலிப்பதாகவும் வயிற்றைக் குமட்டுவதாகவும் சொன்னார்.
“தாதி ஒருவர் மருத்துவர் சொன்ன மருந்தைக் கொடுத்தார்”, எனத் தாயார் கூறினார்.
மகளுக்குத் தவறான மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என அவர் நினைக்கிறார்.
காலை 5 மணி அளவில் தினாஷாவுக்கு இதயத்துடிப்பு நின்றுபோனது.
உதயபானுவும் அவரின் கணவர் பி.கணேசன் ராவும் மருத்துவமனைக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளனர்.
காசு கொடுத்து பட்டம் வாங்கிய தற்கால மருத்துவர்கள் MIC போல தகுதியற்ற ஒரு மருத்துவமனைகல் நம் நாட்டில் உள்ளதை கவனிக்கவும்