கேமரன் மலை வெள்ளப் பெருக்குக்கும் நிலச் சரிவுக்கும், கேமரன் மலை எம்பி ஜி.பழனிவேல், பகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கூப் ஆகிய இருவருமே பொறுப்பாவர் என்கிறார் சிபூத்தே எம்பி தெரேசா கொக்.
மாநில அரசு தேவையான சட்ட அமலாக்கத்தைச் செய்யத் தவறியதை அட்னானே ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே, பழனிவேல் மட்டுமே இதற்குப் பொறுப்பல்ல.
“அட்னான் (சட்டவிரோத காடழிப்புக்கு எதிராக) சட்டங்களைச் செயல்படுத்துவதில் கடுமை காட்டினால் மாநில அரசு குறைகூறப்படும் எனக் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“பழனிவேல் நில ஆக்கிரமிப்பு நெடுங்காலமாகவே இருந்து வந்துள்ளது என்றும் அதன்மீது கண் வைத்திருந்தாலும் அதன் மூலம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
“ஆக, கேமரன் மலையைப் பாதுகாக்க உகந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்காத பழனிவேல், அட்னான் ஆகிய இருவருமே இதற்குப் பொறுப்பு”, என தெரேசா ஓர் அறிக்கையில் கூறினார்.
மந்திரி புசார் அவர்களுக்கு மாநிலத்தில் நடக்கும் விஷயங்கள் தெரிந்துருக்க வேண்டும் ஆதலால் எம் பி பழனிவேல் மட்டும் பொறுப்பல்ல.
என்ன இது அநியாயம் ,பழனிவேலுக்கு முன்பு அங்கு எந்த சட்ட விரோதம் நடக்கவே இல்லையா ? இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பலனிவேலுவை பொறுபேற்க சொல்வது பச்சை பொறுப்பற்ற நடவடிக்கை என்பது தெளிவா தெரிகிறது .அவர் கட்சி எப்படி வழிநடத்துகிறார் என்பது வேறுவிசியம் .ஆனால் அறிவே அறிவு கெட்ட தனமாக தடாரென்று பழியை பழனி மீது போடுவது மடத்தனம் . தேவமணி அங்கு இருந்த பொழுது எந்த சட்ட விரோதமும் நடக்க வில்லையா ? அல்லது இதற்க்கு முன்பு இயற்கை வளம் சுற்று சுழலுக்கு பொறுப்பேற்று இருந்த வேறு ஒரு அமைச்சர் இருந்த பொழுது அங்கு எல்லாம் சரியாக இருந்ததா ? திரேசா கோக் அறிவு முதிர்ச்சியில் சினம் கொண்டு உளறுகிறார் .சிம்மாதரி அவர்களை தொடர்பு கொண்டால் தெரியும் இந்த சட்ட விரோத நடவடிக்கை எவ்வளவு நாட்கள் , எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இருந்து அங்கு நடக்கிறது என்பது . மாநில அரசாங்கம் இத்தனை நாள் என்ன புடிங்கி கொண்டு இருந்தது ,பகாங் மாநில மந்திரி பேசார் இத்தனை ஆண்டு என்ன சரித்து கொண்டு இருந்தார் ,பழனிவேலு பொறுப்பு என்றால் ,தேவமணியும் குற்றம்சாட்ட படவேண்டியவர்தான் ,இதற்க்கு முன்பு இருத்த இயற்கை வள சுற்று சுழல் அமைச்சரும் அதற்கு முழு பொறுபேற்க வேண்டும் . இந்த விவகாரத்தில் இந்திய சமுகம் பழனியை தர்காக்க வேண்டுமே தவிர புளிதிவாரி இறைக்க கூடாது .அவர்கட்சி சார்ந்த விவகாரம் வேறு .ஆனால் இயற்கைவளம் சுற்று சுழலுக்கு பொறுப்பேற்று பழனிவேலு எவ்வளவு நாட்கள் ஆகிறது ,கேமரன் மலை நாடாலமன்றது உறுபினராக எவ்வளுவு நாட்கள் பொறுப்பேற்று இருக்கிறார் என்பதை அறிந்து பேச வேண்டும் .பழனிவேலு குற்றவாளி என்றால் மாநில நிலம் இலக்கா தலைவர் ,அதை கேமரன் மலை நில அலுவலகத்தின் தலைவர் ,இதற்கு மேலாக மாநில மந்திரி பேசார் (முதன்மை குற்றவாளி ),முன்னால் நாடாளமன்ற உறுப்பினர் தேவமணி ,முன்னால் இயற்கை வள சுற்று சுழல் அமைச்சர் அனைவருமே குற்றவாளி எனபது நிரூபணம் . கேமரன் மலை சிம்மாதரி உங்கள் உள்மனதை தொட்டு சொல்லுங்கள் பளிநிவேலுவை குற்றவாளியாக்க முடியுமா ?மனதில் கைவைத்து சொல்லுங்கள் .அரசியல் வேறு உண்மையும் நேர்மையும் வேறு சிம்மாதரி .உங்கள் கருத்தை அறிய ஆவலோடு இருக்கிறேன் .பழனியை கருப்பு ஆடாக பலியாக்க துடிக்கும் ஜென்மங்களுக்கு சரியான பதிலடி கொடுபீர்கல் என்று நம்புகிறேன் .இங்கு பழனிக்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை ஆனால் ,எல்லாம் விவகாரத்திலும் ஒரு இந்தியன் பலியாக்க படுகிறானே என்ற ஆத்திரம்தான்.சக்தியின் மகன்
இது இருக்கட்டும் கோலாலம்பூர் ரில் அந்நியர்களின் அராஜகம் தாங்க முடியவில்லை அதற்கு நீங்கள் தானே பொறுப்பு என்ன பண்ண போறீங்க
இதற்கு முழு பொறுப்பு மந்திரி பெசார் அட்னான் யாக்கூப் அவர்களே! இந்த விஷயத்தில் பழனிவேலு எந்த அதிகாரமும் இல்லாதவர். அவரைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. பெரியார் போற்றி! போற்றி!
அன்பரே![சக்தியின் மகன்] நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இவ்விஷயத்தில் பழனி செய்த ஒரே தவறு, சென்ற பொதுத்தேர்தலுக்கு பிறகு கேமரன் மலை மக்களை சரிவர கவனிக்காததுதான்.
MH 370 காணமல் போனதற்கு யாரையும் குற்றம் சொல்லாத சிபுதே தெரேச இப்போதான் வாய் திறந்தொதோ?
மலையில் வெள்ளம்?.. இங்கு எல்லாம் என்னவோ நடக்குது ..உலகம் அழிய போகுது..
சக்தி உங்கள் கருது மிக அலமானது உன்மைலெஹ் நன் ஆதரிக்கிறேன் நீங்கள் குரியது போல் மந்திரி புசார் என புடிகிக்கிட்டுஇருந்தன
இங்கு எவனுக்கும் அக்கறை இல்லை— ஆளும் திமிர்.
மலையில் நடந்த, நடக்கும் அனைத்து இயற்கைப் பேரழிவுக்கும் மாநில அரசாங்கத்தின் மந்திரி பெசராக இருப்பவரே பொறுப்பேற்க வேண்டும். நில சம்பந்தப் பட்ட அனைத்து அதிகாரமும் மாநில அரசாங்கத்தின் கையில். கேமரன் மலை நில அலுவலகம் இந்நாள் வரை என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்?. எந்தெந்த மாவட்ட ஆட்சியர் ஊழல் புரிந்து விசாரிக்கப் பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டனர்?. அனைத்தும் நடந்து முடிந்து இறுதியில் பழனிவேல் அங்கு வந்து உட்கார ‘காக்கை உட்கார பனங்காய் விழுந்த கதையாயிற்று’. இயற்கை சுற்றுப்புற சூழல் அமைச்சராவதற்கு முன்னரே அங்கிருந்த காடுகள் மொட்டை அடித்து மஞ்சள் பூசப் பட்டத்தை அறியாதது போல் மந்திரி பெசார் மௌனமாக இருந்து காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றானே, அவன் உண்மையானவனா?. ஒட்டு மொத்தத்தில் இந்த தொகுதியும் அடுத்த தேர்தலில் அம்நோகாரன் கையில். சிங்கம் அவர்கள் சொன்னதுதான் நடக்கப் போகின்றது.
அட போங்கய பழனிவேலு உப்பு சப்பு இல்லாத…………….. கவனிக்கத்தான் நேரமிருக்காம்……………
ஆமாம் மந்திரி புசார் தான் காரணம் அதுமட்டும் இல்லை, வெள்ளம் வந்தாலும், மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும், எவன் வீட்டில் நெருப்பு புடிச்சாலும், ரோடு குண்டும் குழியுமா இருந்தாலும், தெரு விளக்கு எரியலனாலும், விபத்து நடந்தாலும், கொலை விழுந்தாலும், யாருகாவது கலியாணம் நடகலனாலும், யாருக்காவது பேதி வந்தாலும், வாந்தி வந்தாலும், சீக்கு வந்து செத்தாலும், மரத்தில் இலை கொட்டினாலும், ஏழரை சனி பிடிச்சாலும், தலை முடி கொட்டினாலும், பல்லு விழுந்தாலும், பரிச்சையில் பெயில் ஆனாலும், ரத்தகொதிப்பு இன்னிப்புனிறு வந்தாலும், முட்டைபுச்சி கடிச்சாலும்,
இன்னும் என்ன எழவு நடந்தாலும் மாநிலத்தின் மந்திரிபுசர்தான் பொறுப்பு ஏற்க்க வேண்டும்.
இதற்கு அரசாங்க அதிகாரிகள் வாங்கிய லஞ்சம் தன் காரணம்
நன்றி ஜே .சிம்மாதரி.உங்களின் பதிலுக்கு நன்றி .உங்கள் சார்ந்த கட்சி தலைவகளுக்கு கேமரன் மலையில் நடந்தது இயற்கை சீற்றம் இல்லை ,அது மாநில அரசாங்கம் தடுக்க மறந்த செயற்கை சீற்றம் என்று அறிவுறுத்துங்கள் ,திரேசா கோக் ஒரு சமுதாய போராட்டவாதி என்பதை அறிவேன் .இருந்தாலும் சில சமயங்களின் அரசியல் சிந்தனையில் உண்மைக்கு புறம்பான அறிக்கை விடும்பொழுது அதை மறுக்கும் சிந்தனையில் நீங்கள் இருக்க வேண்டும் .கேமரன் மலையில் நீங்கள் இருகிறீர்கள் அங்கு உள்ள நிலைமை என்ன என்பது உங்களுக்கு நன்கு தெரியும் .எவ்வளவு கலாம் நீங்கள் கேமரன் மலையை காப்பாற்ற போராடுகிரிர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் .பழனி தொகிதி மக்களை சந்திக்க வில்லை என்றால் அதற்கு வரும் பொது தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் . எனுடைய தற்பொழுது உள்ள ஆதங்கம் எல்லாம் ,சட்ட விரோதமாக கேமரன் மலையில் குவிந்த அந்நிய தொழிலார்கள் ,அதனால் ஏற்பட்ட சட்ட விரோத காடு அழிப்புக்கு பழனிவேலு மீது கையை நீட்டி குற்றம்சாட்டுவது ஏற்று கொள்ளவே முடியாது .கேமரன் மலையில் சட்விரோத குடியேறிகளின் பிரச்சனையை களைவதற்கு அங்குள்ள காவல் துறை தலைவர் தவறி இருக்கிறார் ,பகாங் மாநில குடிநுழைவு இலாக்க தவறி இருக்கிறது ,மொத்தத்தில் உள்துறை அமைச்சே கடமையை தவறி இருக்கிறது .இத்தனை குள்ள நரிகள் தப்பிபதற்கு பழனிவேலு மீது எல்லாவற்றையும் அள்ளி வீசி தப்பிக்க நினைப்பது முறையற்ற செயல் .u p s r தேர்வு தாள் கசிந்தது ,விமானத்தின் இயந்திரம் களவு போனது ,taipan போலிஸ் நிலையத்தில் கைதியை அடித்து கொன்றது முதல் எல்லாவற்றிற்கும் இந்தியனை அல்லது தமிழனை கை காட்டி தப்பித்து கொள்ளும் சூழ்நிலையை இனியும் தடுத்து நிறுத்த வேண்டும் .இந்த நிலையில் கட்சி பேதம் இன்றி சிம்மாதரி நேர்மைக்கு முன் நிற்பார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை .இந்த விவகாரத்தில் பழனியை தர்காக்க அணைத்து தமிழனும் போராட வேண்டும் .
இரவல் தந்தவன் கேற்கின்றான் இல்லை என்றால் அவன் விடுவானா ..போனால் போகட்டும் போடா … இரவு நேரம் என்பதால் எடுத்த இடத்தில வைத்துவிடு ..நாளைய உலகம் உனதல்ல உன் ஜனனம் என்பதும் உனக்கு தெரியாது. பொறுப்பு பொறுப்பு என்ன பருப்போ?
அம்மையாரே! கேமரன் காடழிப்பில் முக்கிய பங்கு வகித்தது, ஊமைத்துரை பழனியோ அல்லது திமிர் நாயகன் அட்னான் யாகொப்போ அல்ல. சுல்தான் அரண்மனையிலிருந்து வெளியான மஞ்சள் காகிதம். அக்காகிதத்தை வெளியாக்கியது யார் எனும் கேள்வியை எடுத்து வைக்கும் தைரியம் உம்மிடம் உண்டா? [இவ்வேளையில் கர்ப்பால் சிங் இல்லாதது, பெரிய இழப்பு.}
சக்தியின் மகனுக்கு நன்றி. உங்கள் கூற்றில் பழனியை தர்காப்பதை தவிர்த்து, மற்றெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை.நன்றி. தமிழ் தினசரிகளை வளம் வாருங்கள். உங்கள் எதிர்ப்பார்ப்புகளை பொய்ப்பிக்க மாட்டேன். வாழ்த்துக்கள்.
யானை மாதிரி பெயரை வச்சுக்கிட்டு கழுதை மாதிரி கதை சொன்னா, யானையும் கழுதையும் ஒன்றாகத்தான் தெரியும்.
கொட்டுகிற மாதிரி பெயரை வைத்துகொண்டு ,தட்டான் மாதிரி உளறி கொண்டு இருந்தால் தேனியும் தட்டானும் ஒன்றாகத்தான் தெரியும் .
தேன் சுவைக்கும். தட்டானுக்கு அந்த தகுதி கிடையாது. அதைப் போலத்தான் கூலிப் படையினர், ‘சுதந்திரம்’ என்றால் எவ்வளவு விலை என்று கேட்பீர். தன்மானம் என்றால் தப்புக் கணக்கு என்று பதில் சொல்வீர். மலர் என்றால் தேனீ மொய்க்கும். தட்டானுக்கு அதன் அருமை தெரியாது. அப்புறம் எப்படி தேனியும் தட்டானும் ஒன்றாகத் தெரியும்?. ஒருகால் இந்த மலருக்கு மாலைகண்ணோ?.
சக்தியின் மகன் அவர்களே! திரேசா அம்மையாருக்கு சவால் விடுவது போன்றதொரு அறிக்கை இன்றைய [23-11-2014] தினக் குரல் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் ஜே.சிம்மாதிரியின் அறிக்கை வெளியாகியிருந்ததை கவனித்தீர்களா?
பார்த்தேன் படித்தேன் , திரு சிவகுமார் அவர்களின் பத்திரிகை செய்தியையும் படித்தேன் .திரு ஜே சிம்மாதரிகும் ,பத்து காஜா நாடளமன்ற உறுபினருக்கு நன்றி .
பழனிவேல் சூப்பர் தலைவர் தெரியுமா பம்பரம் போல உழன்று சேவை செய்து தமிழன் இன்று எல்லாத்துக்கும் ….. கொண்டு இருக்கிறார்கள்…………………
j, சிம்மதிரியை விட பழனிவேல் எவ்வளவோ பரவாயில்லை. இதுநாள் வரை j.சிம்மாத்திரி அறிக்கை விடுவதோடு சரி, அவரை விட அறிக்கை விடுவதற்கு நிறைய அறிக்கை மன்னர்கள் பொக்கெட்டில் அறிக்கை வைத்து கொண்டு அலைகிறார்கள்.