ஊழியர்களின் கவனக்குறைவால்தான் ஜி.தினாஷா இறந்தார் என்று கூறப்படுவதை அசுந்தா மருத்துவமனை மறுத்துள்ளது.
அந்த 14-வயது மாணவிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதில் மருத்துவமனை நடைமுறைகள் சரியாகவே பின்பற்றப்பட்டன என அம்மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரி பீட்டர் டிஎல் லியோங் கூறினார்.
“தொடக்கநிலை விசாரணைகள் அக்கொள்கை பின்பற்றப்பட்டிருப்பதைக் காண்பிக்கின்றன”, என்றாரவர்.
தினாஷாவின் பெற்றோர், இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் தவறான மருந்து கொடுக்கப்பட்டதால் தங்கள் மகள் இறந்து போயிருக்கலாம் என்றனர்.
அது பற்றிப் போலீசிலும் புகார் செய்துள்ளனர்.
மருத்துவமனைகள் எப்போதுமே கவனக்குறைவாக இருப்பதில்லை! நோயாளிகள் தான் கவனக்குறைவாக இருப்பவர்கள்! பெரியார் போற்றி! போற்றி!
போச்சுடா, இப்ப அரசியல்வாதிகள் இந்த பிரசனையை தங்களுக்கு சாதகமா பயன் படுத்தி குளிர்கயிவர்கள்.
14 வயது, நினைத்தாலே நெஞ்சு கணக்குது. பெத்தவங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது, சொன்னாலும் குழந்தையின் உயிருக்கு இடகுமா? GH க்கு போனால் ஒழுங்க கவனிக்க மாட்டங்க்கத்தான் பிரைவேட் ஆஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போனால் தூக்கிகிட்டு வரவேண்டியதா இருக்கு. ஏன்டா பணத்ககுக்காக பிஞ்சு உயிரோடு விளையடிரிங்க? திடீர் என்று முடியாமல் போய்விட்டதாம் அதனால் நர்ஸ் மருந்து கொடுத்தாலாம், ஏனடா கதை சொல்லுறே, பிரேவெட் ஆஸ்பிட்டல் தானே பேசலிட் டக்டேரெல்லாம் என்னத்த புடுங்க போனிங்க? அநியாயமாய் ஒரு பிஞ்சு உயிரை விட்டதடா,
செல்வமே தினாஷா உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்,
கும்கி என்ற புனைபெயரில் எழுதும் மணி….ன் மற்றும் குடும்பத்தினர்.
இந்த கேசும் கொலையும் அல்ல ,தற்கொலையும் அல்ல என்ற
மாதிரி இருக்கு. மருந்தும்,மருத்துவமனையும் உங்களுடையது தானே.
எந்த மருத்துவமனையின் மருத்துவர் அல்லது ஊழியர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் ஒருகாலும் பகீரங்கமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.கொலைகாரன் கொலையை செய்துவிட்டு, நான்தான் கொன்றேன் என்று ஒப்புக் கொள்வது ஒரு அரிதான செயல்.அவர்கள் அநியாயமாக ஒரு பிஞ்சு உயிரோடு விளையாடிவிட்டனர்.அந்த உயிரும் இனி வரப்போவதில்லை.ஆனால் அதற்கான நஷ்ட ஈட்டை அந்தமருதுவமனை கொடுத்துதான் ஆகா வேண்டும்.செய்தியை படிக்கும் நமக்கே வேதனையை தாங்க முடியவில்லையே.பெற்றவர்களின் மனம் எப்படி துடிக்கும்.இதனை அந்த மருத்துவமனையின் மருத்துவர்களால் ஏன் உணரமுடியவில்லை?
சாந்தி போலவும் MK போலவும் செல்லா லஞ்ச காசுக்கு படித்த மருத்துவர்களை அணுகினால் இதுதான் நேரும்
Moneynarayanan… சாந்தி காசுலதான் படித்தார் என்று உம்மிடம் யார் சொன்னார். செல்வி தினாஷாவை இழந்து நிற்க்கும் பெற்றோருக்கு ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை ஏனென்றால் அது உமது வளர்ப்பு அப்படி. ஆனால் ஜோக் அடிக்க இதுவா நேரம்.
உண்மை வெளி வரும்.