ரோன் 95-க்கான விலை இனி, managed float system என்ற முறையின் அடிப்படையில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். இதன்படி அனைத்துலகச் சந்தையில் 10-நாள் எண்ணெய் விலைகளிலிருந்து ஒரு சராசரி கணக்கிடப்பட்டு கூடவே சுத்திகரிப்பு ஆலைகள், சில்லறை வணீகர்கள் ஆகியோரின் ஆதாயமும் நிர்ணயிக்கப்பட்டு எண்ணெய்க்கான விலை முடிவு செய்யப்படும்.
இப்புதிய முறையில், மாதந்தோறும் எண்ணெய் விலை மதிப்பிடப்படும். உதவித் தொகை இருக்காது.
உள்ளூர் வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹசன் மாலெக்கால் நேற்று அறிவிக்கப்பட்ட இப்புதிய விலை நிர்ணய முறை டிசம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.
Barang Naik கட்சிக்கு ஓட்டுப் போட்ட 49% மக்களுக்கு வெச்சாண்டா பெரிய ஆப்பு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை விரைவில் ஏறும்பொழுது தெரியுமடா இதன் அடி.
அரசாங்கம் என்ன தான் சொல்லவருகிறது,இந்த மாற்றம் மக்களுக்கு லாபமா?நஷ்டமா?
நம்ம ‘பரிவு மிக்க’ அரசாங்க்கத்தின் இன்னொரு ____முல்லு. மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
இரண்டு குரங்குகள் ஒரு தோசையை எடுத்துக்கொண்டு நரியிடம் நியாயம் கேட்க சென்றாதாம் . தோசையை பார்த்ததும் நரிக்கு பசி வந்ததாம் உடனே அந்த குள்ள நரி குரங்குகளே உங்களுக்கு நான் இந்த தோசையை சமமாக பிரித்துதருகிறேன் என்று கூரி இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று முழு தோசையையும் தானே தின்று விட்டதாம் . இப்போ நஜிப் குழுமமும் அதை தான் செய்கிறது . மொத்தத்தில் மக்கள் தலையில் துண்டு குடா மிஞ்சாது
ஒரு மாதத்திற்கு முன் Fern Leaf full cream பால் மாவு பெரிய பேக்கெட்டின் விலை RM44.90. இன்றோ RM47.90. இப்படியே விலை அந்தபந்தமில்லாமல் ஏறிக் கொண்டு போனால் ஏழை மக்கள் என்ன செய்வார்கள்!. நஜிப் அரசாங்கத்திற்கு சாவு மணி அடிக்கும் நேரம் வந்து விட்டது போலிருக்கு.
அம்னோவின் இந்த முடியு மக்கள் பலன் அடைவார்கள் .எதிர்கட்சியின் குட்டை கொலப்பியதால் மக்களுக்கு பெரும் பாதிப்பு .
சாவு மணியா அவனை ஒளித்து கட்ட வேண்டுமையா
இனி நம்மா நாட்டில் பெட்ரோல் எடுதும் பயன் மக்களுக்கு இல்லை. முன் கார்களின் வரி விலை அதிகம் விற்பதுக்கு காரணம் பெட்ரோல் விலை குறைவு உதவி தொகை கொடுக்கிறோம் என்றார்கள் இப்போது கார்களின் விலை குரைபன்கள இல்லை நாய் மாதிரி குளைபன்கள இந்தா…………….
சர சரி எல்லாம் விளையும் 20%-30% ஏறி விட்டது அடுத்து GST இக்கு பிறகு மறுபடியும் 20%-30% ஏறும் மொத்தம் 50%-60% இன்னு 12 மதத்தில்……..
அடுத்து TNB , TOLL , காத்திருங்கள் …………..நஜிப் இன்னும் பால இன்ப அதிர்ச்சி கொடுப்பர் .
சரியாக சொன்னீர் கும்கி…
எல்லா சலுகைகளையும் பிடுங்கி …. மக்களுக்கு கொடுக்குறேன்னு சொல்லி….. தோல் கட்டணம், மின்சார கட்டணம் இன்னும் பல நிறுவனங்கள் அவன் அவன் தலைமையில் உள்ள நிருவனங்கலுக்கு பகிர்ந்து கொள்ள போறானுங்க …. இதுதான் இந்நாட்டு அரசியல்…. இன்னும் பல பெரிய ஆப்பு காத்துகிட்டு இருக்கு … பொருங்க மக்களே..
அம்னோவுக்கு வக்காலத்து வாங்கும் மட்டிகளே, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் வரப் போகும் நிலையை அறியாமல் உளறுவது உமது அறியாமையா அல்ல செம்பருத்தி வாசகர்களை மடைமாற்றம் செய்ய அனுப்பப் பட்ட புல்லுரிவிகளின் வேலையா?. தமிழன் இன்னும் தூங்கி விடவில்லை. ஆராரிராரோ பாடுவதற்கு. கொஞ்சம் கவனித்து வாசியுங்கள். இல்லை என்றால் உங்கள் குழுவுக்கு நீங்களே கரி பூசும் நேரம் வந்து விடும்.
பெரிய பருப்பு போல் பேசினால் மட்டும் பத்தாது, BN காரன் கொடுக்கும் சலுகளையும் வாங்ககூடாது.
விலை ஏறுதுன்னு கொக்கரிக்கும் மட்டிகளே, விலை ஏறும் பொருட்களை பயன்படுத்தாதீர்.
எதிர் கட்சி என்று ஒன்று இல்லையென்றால் இந்த நாடு எப்பொழுதே நாசமாய் போயிருக்கும்;ஏழை மக்களுக்கு அரசாங்கம் செய்யும் அநியாயங்களை எதிர் கட்சி தட்டி கேட்கின்றன.அரசாங்கம் கொண்டுவரும் திட்டத்தால் மக்களுக்கு தீமை ஏற்படும்பொழுது யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் அது எதிர் கட்சியானாலும் சரி; இல்லை, சாதாரண மக்களானாலும் சரி;எதிர்த்து கேள்வி கேட்கலாம்.அரசாங்கத்தை சேர்ந்த பெருச்சளிகளுக்கு நன்மையையும் மக்களுக்கு தீமையும் கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்தையும்அரசாங்கம் அமுல் படுத்தா கூடாது.என்ன நடந்தாலும் வாய் திறந்து பேசாமல் எல்லாவற்றிக்கும் சரி சரியென்று தலையை ஆட்டும் மண்டுகள்.எதிர்கட்சிகள் குட்டையை குழப்புகிறார்கள் என்று இங்கு வந்து கதைவிடுகிறார்கள்.உங்களையெல்லாம் திருத்தவே முடியாது,
பால் விலை ஏறினால் பால் போடாமல் கோப்பி குடி, எண்ணெய் விலை ஏறினால் காடி மோட்டோர் பாவிக்காதே பஸ்ல போ இல்லன பைசிக்கள் வாங்கு, டோல்லுக்கு காசு கொடுக்க முடியலைன பழைய ரோட்டை பயன் படுத்து. சாலை விதிமுறைகளை பின்பற்றினால் தெண்டத்துக்கு சம்மன் கட்டவேண்டியதில்லை, பெரிய பெரிய சாப்பாட்டு கடையில் சாப்பிடாமல் விலை குறைவான கடையில் சாபிடலாம் ( அதுதான் முடியாதே காசு இல்லைய்னாலும் கௌரவம் போயிருமே) கல்யாணத்தை பெரிய பெரிய மண்டபத்தில் வைக்காமல் கோவிலில் வைத்து சைவ சாப்பாடு போடலாமே ( இங்கதானே இடிக்குது, கல்யாணத்தை சிம்பால நடத்தி , சில பேருக்கு கல்யாணம் நடந்துச்சான்னு தெரியாது, என்ன கிடைத்தது விருந்து காட் தானே, பெரிய சினன் மண்டபத்தை 2000 or 3000 இக்கு வாடகைக்கு எடுத்து 10.000 வெள்ளி அலங்காரம், சாப்பாட்டுக்கு 50.000 வெள்ளி (ஜெயில் போல தட்டை துக்கிட்டு வருசையில் நிக்கணும்) மேடை அலங்காரம் வேற தணியா, மாப்பிள்ளை கோட்டு சூட்டு மணப்பெண் கவுன் வாடகை 2,500 ( தமிழர்களின் பாரம்பரிய உடை) அதுபோக கிளசைஎல்லாம் அடுக்கி வச்சு மணமக்கள் அதில் தண்ணிர் உத்துறதும் கேக் வேட்டறதும் நம் தமிழர்களின் பண்பாடு. முகால்வாசி தமிழ் பண்பாடு பற்றி பேசும் நாதாரிகள் இதைத்தான் செயிது, இவ்வளவு செலவு செய்தும் முனே முக்கால் நாள்ள விவகாரத்துல வந்து நிக்குது, இதுல பெருமை வேற என் புள்ளைக்கு 50.000, 80.000 வெள்ளி செலவு செய்தேன் என்று (வீட்டை அடமானம் வச்சி, சொந்தகரகளிடம் கடன் வாங்கி, ஆலோங்கிடம் கடன் வங்கி கடைசியில் செருப்படி வாங்கறது வேற விசயம்) இப்படியெல்லாம் தெண்டத்துக்கு செலவு செய்யற நாதாரிகள் பேசுது விலைவாசி ஏறுதுன்னு. கௌரவத்தை விட்டுவிட்டு சிக்கனத்தை கடைபிடித்தால் நன்றாக வாழலாம். கௌரவம் பார்த்தால் தலையில் துண்டுதான்.
உணர்சிவசபடுவதினால் ஒன்றும் ஆக போவதில்லை.. அரசாங்கம் என்றுமே பயனுள்ள திட்டத்தைதான் செயல்படுத்துகிறது.
மக்களுக்கு நல்லதைச் செய்யத்தான் அரசாங்கமே ஒழிய அவர்களுக்கு துன்பத்தை கொடுக்க அரசாங்கம் அல்ல. மக்கள் வரிபணத்தை ஓரின மக்களுக்காக வாரி இறைத்து விட்டு மற்றவரை வாட்டி வதைப்பதுதான் இந்த தே.மு. அரசாங்கம். அப்படிப்பட்ட அரசாங்கம்தான் வேண்டும் என்போர் சுயநலவாதிகள். அந்த பட்டியலில் இங்கு சிலர் வந்திறங்கி உள்ளனர். விலை ஏறிய பொருளை வாங்கும் சக்தி என்னிடம் உள்ளது. நான் பார்ப்பது ஏழை மக்களை. பொருளாதார வலுவில்லாதவர்களை. கூலிக்கு மாரடிக்கும் கும்பலுக்கு ஏழையின் வலி எங்கே தெரியப் போகுது. போக்கத்த பையன்கள் வேலை எல்லோருக்கும் வெளிப்படையாகவே தெரிகின்றது. இதற்கு மூடு மந்திரம் தேவை இல்லை.
தெண்டத்துக்கு செலவு செய்யற நாதாரிகள் பேசுது விலைவாசி ஏறுதுன்னு?. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை அடக்கத் தெரியாத அரசாங்கத்தை குறை சொன்னோம். அலங்கார ஊர்வலம் வரும் நாதரிகளை இங்கு கொண்டு வந்து இறக்கியது யார்?. எவனெவன் தண்டச் செலவு செய்கின்றானோ அவன் பணத்தின் மமதையில் செய்கின்றான். அவன் செய்யும் செலவுக்கும் அரசாங்கத்தின் கையாலாகாததனத்தால் விலைவாசி விஷம் போன்று எகிறுதே அதற்கும் என்ன சம்பந்தம்?. அதை அறிந்தும் அறியாதது போல் இங்கே உளரும் உளறுவாயன்களுக்கு கூலி எவ்வளவு?.
அன்வரை நம்பி மோசம் போகாதீர்கள் அன்பர்களே..சுயநலத்துக்காக நம் மக்கைகளை பயன்படுத்துகிறான்.இதில் DAP குளிர் காய்கிறான்.இருக்கிற கோவிலேயும் மணியை அடிக்க கூடாதுனு சொல்லப்போறாரு.
கும்கியும் சாந்தியும் மாங்கா …… மாதிரி எழுதுகிறார்கள்.
கும்கி எழுதியது சரி, சில பொறுப்பற்ற …… இந்தியன்களுக்கு
பொருந்தும்,எல்லா இன மக்களுக்கும் பொருந்தாது.
ஏன் அன்வாரை நம்பனும்?. ஏன் டி.எ.பி.-யை நம்பனும்? ஏன் தே.மு. நம்பனும்?. எவனும் எங்களுக்கு ஐந்து காசு கொடுத்து உதவப் போவதில்லை. தமிழன் தன் கையே தனக்கு உதவி என்று சுய காலில் நிற்க பழகிக் கொண்டால் கூலிப் படையின் அறிவுரை தமிழனுக்குத் தேவைப் படாது.
தேனிக்கு அப்பஅப்ப முளை வேலைசெயுதுதே.
பெட்ரோலுக்கு அமல்படுத்தப்பட விருக்கும் இந்தப் புதிய விலை நிர்ணய முறை பெற்றோல் உற்பத்திச் செய்யாத சிங்கப்பூரில் விற்கும் விலைக்கு ஏற்ப இருக்குமா? அல்லது பெற்றோல் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் புருணயில் விற்கப்படும் விலைக்கு ஏற்ப இருக்குமா என்பதை அரசாங்கம் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். இதை மக்களுக்கு தெளிவுபடுத்த நமது அரசு கடப்பாடு கொண்டுள்ளது.
KUMKI, பல சந்தர்பங்களில் பல ஏற்றுக்கொள்ளமுடியாத தங்களின் கருதுக்களுக்கிடையே, மேலே தாங்கள் கூறிய நமது சமூகத்தின் ஊதாரித்தனத்தையும், போலி ஆடம்பரத்தனத்தையும் பற்றிய கருத்துகளில் பலவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து.
மடையனாய் இருந்து அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புவனை மாற்றி அமைக்கலாம். அறிவிருந்தும் திறமையாய் சிந்திக்காமல் அறிவிலிபோல் இயங்குவோரை/ நடிப்போரை உதாசீனப் படுத்துவதே சிறந்தது. தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்குவதுபோல் நடிப்பவனை ???????
ஏமாற்றப்படும் மக்களுக்காக சிறந்த கருத்துக்களை கொடுத்து மக்களை வெளிச்சத்துக்கு கொணர கருத்து தெரிவிப்போமாக!!!
தேனீ சார்…! BRIM காசுக்காக கால் கடுக்க வரிசையில் நின்றது வசதியாக மறந்து விட்டு – இன்று ஏன் பாரிசானை நம்பனும் என கேட்பது நியாயமா ??