நஜிப்: மிதவாதம் என்றால் தாராண்மைத்துவம் மற்றும் பன்மைத்துவம் ஆகாது

Najib's global movementமிதமான போக்கை கடைபிடிப்பது என்றால் தாராண்மைத்துவத்திற்கு அல்லது பன்மைத்துவத்திற்கு ஒப்புதல் அளிப்பது என்றாகாது என்பதை பிரதமர் வலியுறுத்தினார்.

தமது மிதமான நிலைப்பாட்டை சில தரப்பினர் “புரிந்துகொள்ளவில்லை” அல்லது “வேண்டுமென்றே புரிந்துகொள்ளவில்லை” என்று நஜிப் அவருடனான நேர்காணலில் கூறியிருந்ததை இன்று (நவம்பர் 23) மிங்குவான் மலேசியா வெளியிட்டது.

“மிதமாக இருப்பது என்றால் நாம் தாராண்மைத்துவத்தை அல்லது பன்மைத்துவத்தை ஆதரிக்கிறோம் என்று பொருள்படாது”, என்று அவர் கூறினார்.

“நாம் செய்யும் எதுவும் இஸ்லாமிய சமயக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்”, என்று நஜிப் மேலும் கூறினார்.

அம்னோவை ஒரு மிதவாதக் கட்சி என்று வர்ணித்த அவர், அம்னோ அதன் போக்கை மாற்றுவதற்கான தேவை ஏதும் இல்லை, ஏனென்றால் அதன் போக்கு எப்போதுமே அவ்வாறே இருந்துள்ளது என்றார்.