மலாய்க் காப்பு நிலங்கள் பறிபோயிருப்பதாக அம்னோ இளைஞர் தலைவர் ஓலமிடும் வேளையில் அதற்கு யார் காரணம் என்று அம்னோ தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும் என பாஸ் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் முகம்மட் நாசாயி இஸ்மாயில் கூறினார்.
மலாய்க்காரர் நிலங்களைப் பாதுகாக்க அறங்காவல் மன்றம் அமைக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் பரிந்துரைத்திருப்பதன் பின்னே உள்ள நோக்கம் மேலானது என்றவர் வரவேற்றார்.
“ஆனால், மலாய்க்காரர் காப்பு நிலங்கள் கைவிட்டுப் போனதற்கு யார் பொறுப்பு என கைரி அவரின் அம்னோ சகாக்களைக் கேட்க வேண்டும்”, என்றாரவர்.
மேம்பாட்டுப் பணிகளுக்காக கோலாலும்பூரைச் சுற்றியுள்ள பாரம்பரிய கம்பத்து நிலங்கள் ஒய்டிஎல் போன்ற நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன.
பேராக்கில், பிளஸ் நெடுஞ்சாலைக்குப் பக்கத்திலும் “பல ஏக்கர் நிலங்கள்” ஒய்டிஎல்-லுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
“இவற்றை அங்கீகரித்தது யார்?”. மேம்பாடு என்ற பெயரில் கைரியின் ஆளும் கட்சிதான் அவற்றைத் தாரை வார்த்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
எங்க நிலத்தை எல்லாம் கட்சிக்கு ஒரு பாகமா கூறு போட்டுக்குங்கோ!. அதுதான் உங்கள் மதம் சொல்லுகின்ற ‘சமத்துவம்’. என்னே பித்தலாட்டம்.
பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதைதான்.
உம்நோதான் மக்கள் பணத்தையும் சுரண்டி ஏப்பம் விட்டவன் இதையும் சொல்லுங்கோ pas ஏன் ஹாடி அவங் இதை சொல்ல வேணாம்னு சொன்னனா ?