பிரதமர் நஜிப் அப்ல் ரசாக், தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து இருக்கும் எனக் கூறியதும் அம்னோ பேராளர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவரைப் பாராட்டினார்கள்.
ஆக, கட்சிக்குள் கொடுக்கப்பட்ட அழுத்தத்துக்குப் பணிந்து அச்சட்டம் இரத்துச் செய்யப்படாது என்ற முடிவுக்குப் பிரதமர் வந்திருப்பதுபோல் தெரிகிறது.
“அச்சட்டம் வைத்துக்கொள்ளப்படும், அத்துடன் மேலும் வலுப்படுத்தப்படும்”, என இடிமுழக்கம் போன்ற கரவொலிக்கிடையில் அவர் அறிவித்தார்.
இஸ்லாத்தையும் மற்ற சமயங்களையும் பாதுகாக்கவும் சாபா, சரவாக் ஆகியவற்றின் பிரிவினை பற்றிப் பேசுவோரை ஒடுக்கவும் அச்சட்டம் தேவைப்படுவதாக நஜிப் விளக்கினார்.
14ஆம் தேர்தலில் பி.என் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் .
இப்படிப்பட்ட சட்டங்களை வைத்து கொண்டு எதிர்கட்சிகளை ஒடுக்குனும், இதைத்தானே 57 வருடமாக செய்து கொண்டிருக்கிறீர்கள்.
சட்டம் தெரியாத மட்டி பேசுது. வலுபடுத்தப் போறாராம்?. அங்கே வலுப்படுத்துவதற்கு ஒன்னும் இல்லை சாமி.
நம்புங்கள் நம்பிக்கை நாயகனை?. இதை விட நம்பிக்கைத் துரோகம் வேறு வேண்டுமா?. ஒரு தலைமைப் பதவியில் இருப்பவரே இப்படி மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால் அந்த கட்சி மாக்கள் எப்படி இருப்பார்கள். தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி. நம்புங்கள் நஜிப் நல்லவன்.
கருத்து சுதந்தரத்துக்கு நஜிப்பு வெச்சார்யியா ஆப்பு.அன்வாரும் தப்ப முடியாது நிந்தனைச்சட்டம் நிலுவையிலிருக்கு!
நாமும் இவனை பதவியிளிரிந்து இறக்க ஒன்றாய் கை கோர்ப்போம்
தேச நிந்தனை சட்டம் சபா , சரவாக் பிரிவினை பேசுவோரிடம் மட்டும் பாயாமல்..இனப் பிரிவினையை தூண்டும் அம்னோ தலைவர்களுக்கும் பயன் படுத்த வேண்டும்..?
இந்த சட்டம்தானே எதிர் கட்சிகாரனுக்கு ஆப்பு அடிக்க உதவி இருக்கு !
அப்பாடா இனியாவது தெரு ஆர்பாட்டங்கள் கொஞ்சம் ஓயும்..
பொது சொத்துக்கள் நாசமாவதையும் தடுக்கலாம்..மாணவர்களும்
குட்டி சுவர் ஆவதையும் குறைக்கலாம் .
ஐ லைக் சாந்தி , சாந்தி சொல்வது உண்மையான வார்த்தை.
இருப்பதையும் இழந்து கோமணமும் மிஞ்சாமல் தெருவில் அலையும் காலம் வெகு தொலைவில் இலை. நம்பிக்கை நாயகனின் தேர்தல் வாக்குறுதி 360 டிக்ரீ சுத்தல் கண்டோம்!!!! ஜால்ராக்களுக்கு ஜே!!!!
ஜால்ராக்கள் பிச்சை எடுக்கும் நாள் வெகுதுராம் இல்லை