ரிம 200 கொள்ளையடித்த இளைஞருக்கு14 ஆண்டு சிறை, 12 பிரம்படி: நாம் தமிழர் இயக்கம் அதிருப்தி

 

பேனா கத்தி பயன்படுத்தி ஓர் ஆடவரிடமிருந்து  200 ரிங்கிட் கொள்ளையடித்த 28 வயது நிரம்பிய என். சரவணகுமாருக்கு 14 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படிகள் என பினாங்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்பளித்தது. இத்தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளதாக மலேசியா நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணப்பாளார் மு.அ.கலைமுகிலன் கூறுகிறார்.

கொள்ளையடித்த அடித்த சம்பவம் தவறுதான். கண்டிக்க கூடிய செயலும் கூட. மேலும் தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனையைப் பெற வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. ஆனால் இந்தத் தண்டனை ஏற்புடையது அல்ல என்றாரவர்.

“வெறும் 200 ரிங்கிட் கொள்ளையடித்தற்கு 14 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படி. இதை மனிதாபிமானமற்ற தண்டனையாகவே நாங்கள் கருதுகிறோம்”, என்றார் கலைமுகிலன்.

அதாவது தண்டனை என்பது ஒருவர் திருந்துவதற்கே தவிர அவர் அந்தத் தவறை மீண்டும் செய்வதற்கு அல்ல. இப்படி 14 ஆண்டு சிறை தண்டனை என்றால், அந்த தண்டிக்கப்பட்டவரின் குடும்பத்தின் நிலையையும் பிள்ளைகளின் நிலையையும் சிந்திக்க வேண்டும். 14 ஆண்டு சிறைக்குப் பின்னர் அவர் மீண்டும் அந்தத் தவறைப் பெரிதாக செய்ய மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது என்றும் அவர் வினவினார்.

நீதிமன்ற தீர்ப்பு அதிகபட்சமாக உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து சமுக தலைவர்களும், வழக்ககுரைஞர்களும், அரசியல்வாதிகளும் குரல் எழுப்ப முன்வர வேண்டும் என்று கலைமுகிலன் கேட்டுக்கொண்டார். சம்பந்தபட்ட குடும்பத்தினர் இந்த பிரச்சனையை மேல்முறையீடு நீதிமன்றத்தில் முறையிடலாம். மேல் உதவிகளுக்கு நாம் தமிழர் இயக்கத்தை நாடவும் 013-5227795.