கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது நஜிப்பின் கடப்பாடு

leongதேச நிந்தனைச்  சட்டம் இரத்துச் செய்யப்படும்  என  வாக்குறுதி  அளித்த  பிரதமர்  நஜிப்  அப்துல் கொடுத்த  வாக்குறுதியை  நிறைவேற்ற  வேண்டும்  என  மலேசிய  வழக்குரைஞர்  மன்றம்  வலியுறுத்தியுள்ளது.

“வாக்கு  கொடுப்பது  வசதியாக  இருக்கும்போது   செய்வதற்காக  அல்ல,   சிரமமான  சூழ்நிலையிலும்  அதை  நிறைவேற்ற  வேண்டியது  கடப்பாடாகும்.

“பிரதமர்  ஈராண்டுகளுக்குமுன்  தேச  நிந்தனைச்  சட்டத்தை  இரத்துச்  செய்யப்போவதாக  கொடுத்த  வாக்குறுதியை  மீறியது  மட்டுமல்லாமல்  அதை ‘வலுப்படுத்தவும்’  நினைக்கிறார்.

“இதன்வழி,  மலேசியர்கள்  பொதுநல  விவகாரங்களை,  தேசியநலன் அல்லது  அரசமைப்பு  சம்பந்தப்பட்ட  விவகாரங்களை விவாதிப்பது  தடுக்கப்படுவதுடன்  மீறினால்  தண்டனைக்கும்  ஆளாவார்கள்  என்பது  நகைப்புக்கிடமானது. இது  அளவுக்கதிகமான  அடக்குமுறையாகும். சர்வாதிகாரத்தின் பக்கமாக  சரிவதுபோல்  தெரிகிறது”, என  வழக்குரைஞர்  மன்றத் தலைவர்  கிறிஸ்டபர்  லியோங்  ஓர்  அறிக்கையில்  கூறினார். .