தப்பித்துக் கொண்டார் நஜிப், ஆனால் அவரின் முடிவு நெருங்கி வருகிறது

zainபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், 1948ஆம்  ஆண்டு  தேச  நிந்தனைச்  சட்டம்  தொடர்ந்து  இருக்கும்  என்று  அறிவித்ததும் அம்னோ பேராளர்கள்  கைதட்டி  ஆரவாரத்துடன்  அதை வரவேற்றார்கள். நஜிப்பும்  நிம்மதி  பெருமூச்சு  விட்டிருப்பார். ஆனால், அதுவே  அவரது  கடைசி  மூச்சாக  இருக்கும்  என்கிறார்  முன்னாள்  தகவல்  அமைச்சர்  சைனுடின்  மைடின்.

அம்னோவில்  புரட்சி   ஒன்று  அமைதியாக  உருவாகி  வருகிறது என்று  சைனுடின்  எச்சரித்தார். அங்கே  கிடைத்த கரவொலி  ஆதரவின்  எதிரொலி  அல்ல,  அடக்கிவைக்கப்பட்டிருக்கும்  உணர்ச்சிகளின்  வெளிப்பாடு;  “பலவீனமானதும்  தாராள  போக்குடையதுமான  தலைமை”  நிராகரிக்கப்படுவதன் அடையாளம்.

“அவர்  மட்டும்  அப்படி  ஓர்  அறிவிப்பைச்  செய்திராவிட்டால்  அம்னோ  உறுப்பினர்கள்  அங்கேயே  அவருக்கு  சாமாதி  கட்டியிருப்பார்கள், அம்னோவின்  எதிர்காலமும்  நொறுங்கிப்  போயிருக்கும்.

“நிம்மதிப்  பெருமூச்சு  விட்டுக் கொண்டிருக்கிறார்  நஜிப். இதுவே  அவரது  கடைசி  மூச்சாகும்”,  என  சைனுடின்  அவரது  வலைப்பதிவில்  கூறினார்.