பிரிவினைக்காக குரல் கொடுப்பதைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றமாக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முடிவுக்கு சரவாக்கில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
சாபா, சரவாக் மாநிலங்கள் மலேசியாவிலிருந்து பிரிந்துசெல்ல கோரிக்கை விடுப்பதைக் குற்றமாக்கும் வகையில் அச்சட்டம் விரிவுபடுத்தப்படும் என அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் அறிவித்ததை கெராக்கான் அனாக் சரவாக்(காசாக்) ஏற்கவில்லை.
“சரவாக் மக்களுக்கு கூட்டரசில் இருப்பதில் திருப்தி இல்லையென்றால் மலேசியாவிலிருந்து வெளியேற இடமளிக்க வேண்டும்.
“சிங்கப்பூர் மட்டும் கூட்டரசிலிருந்து வெளியேற எப்படி அனுமதிக்கப்பட்டது”, என காசாக் தலைவர் அபுன் சூய் அன்யிட் வினவினார்.
சுருட்தி சுரண்ட முடியாமல் போயிடுமே அதுதான் நேரத்துக்கு ஒரு சட்டம் நம் நாட்டிலே விலகுவதுதான் நன்மை
நீங்கள் தனியாக போனால் நாட்டை வழி நடத்த அனுபவம் இல்லை.
கஷ்டபடுவீர்கள். நேரத்துக்கு ஒரு பேச்சு,அடிக்கடி சட்டங்கள்
மாற்றுவது போன்ற கலைகள் எல்லாம் எங்களுக்கு கைவந்த கலை.
sabah sarawak இக்கு நல்ல காலம் …….!தெரியுது …!!
சபா சரவாக் வாக்குகளை நம்பிதானே BN பொழப்பு ஓடுது ! அவர்கள் விலகி போனால் அம்னோ BN கிழிந்திடும் !
அவரவர் உரிமை மிதிகப்படும்போது ஏற்படுவதே போராட்டம். அந்த போராட்டத்திற்கு உரிய பலன் ஆண்டான் சங்கிலியில் பிணைக்கப் பட்டிருந்தவர்கள் அதனை உடைத்தெரிந்து சுதந்திரம் பெறுவதே. அப்படிதானே இந்த மலாயாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. 1948- ல் இருந்த தேச நிந்தனை சட்டத்தை அதனை இயற்றிய ஆலங்கிலேயர்கள் அம்நோகாரர்களுக்கு எதிராக பயன்படுத்தினரா?. அப்படி பயன்படுத்தி இருந்தால் 1957-ல் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா?. அப்பொழுது ஏற்பட்ட சுதந்திரப் போராட்டம் தேச நிந்தனை இல்லை என்றால், இன்று ஒன்று சேர்க்கபட்ட சபா, சரவாக் பிரிந்து செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் அது எப்படி தேச நிந்தனையாகி விடும்?. மீண்டும் இங்கே ஆளும் கட்சி தனது காலனித்துவ ஆட்சி முறையை நிலைப் படுத்த தேசிய நிந்தனைச் சட்டத்தை கையில் எடுப்பது முறையாகுமோ?. வெள்ளைக்காரனும், இங்கே நம்மை ஆளுபவர்களும் ஒரே நிலைப்பாட்டையைக் கொண்டவர்கள். வெள்ளைக்காரார்கள் செய்தால் அது காலனித்துவம் ஆனால் இங்கே வேற்றொரு பிரிவினர் அதையே செய்தால் இது ஒற்றுமையை வலுப்படுத்துவது என்பது யார் காதில் பூ சுற்றும் வேலை?. இந்நாட்டு அனைத்து மக்களும் சமமானவர் என்ற கருத்து வராத வரை இந்த பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இது சேகோஸ்லெவிக்கியா (Czech + Slovakia = Czechoslovakia) கதைதான்.
ஒரு தேசிய இனம் சுயமாக சுதந்திரமாக இந்த உலகத்தில் ஆட்சி செய்ய நினைப்பதை எப்படி குற்றமாகும் .சபா, சரவாக் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில்தான் மலேசியாவோடு சேர்ந்தார்கள்.அதே விருப்பத்தில் சுய மாக ஒரு நாடாக ஆட்சி செய்ய நினைப்பது யாரும் தடுக்க முடியாது.தேச நிந்தனை தீபகற்ப மலேசியாவில் மட்டும்தான் செல்லும்.சபா, சரவாவில் பலிக்காது.
சாபா சரவாக் என்றுமே பிரியாது- பிரியவும் முடியாது— பிரியவேண்டும் என்றால் கிழக்கு திமோர் போல் நடை பெற்றால் தான். நடக்குமா? அத்துடன் எல்லா பதவிகளிலும் தீபகற்ப மலாய்க்காரன் கள் தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றான் கள் -ராணுவத்திலிருந்து காவல் வரையில் எல்லாமே இங்குள்ள மலாய்க்காரன் கள் கையில் தான். அங்குள்ள பூமி புத்ராக்கள் பேருக்கு தான் — அதிலும் அங்கு யாருக்கு 20 அம்ச சட்டங்களைப்பற்றி கேள்வி கேட்க தைரியம் இருக்கின்றது? முதலில் டாயாக் முதல் மந்திரியாக இருந்தார்கள் கடந்த 35 ஆண்டுகள் யார் முதல் மந்திரியாக எல்லா வளங்களையும் தன்னுடைய வங்கி கணக்கில் சேர்த்துள்ளான். தேர்தல் காலத்தில் மலாய்க்காரன் அல்லா பூமி புத்ராக்களுக்கு ஒரு அகோங்கும் ஒரு புட்டியும் கொடுத்து வாக்குகளை பெற்று ஆட்டம் போட்டு கொண்டிருக்கின்றனர். தாயிப் பிள்ளைகள் தனி விமானத்தில் சிங்கபூருக்கு பொருட்கள் வாங்குவதற்கு எத்தனை முறை பறந்து இருப்பனர்? இது யாருடை விமானம்? யாருடைய பணம்? கேட்க யாருக்கு தைரியம்?
அமேரிக்கா சிவப்பு இந்தியர்களின் நிலமை ,மலேசியாவிலும் அஸ்லி ,சபா,சரவாக்கினருக்கும் ஏற்ப்பட்டுவிட்டது என்று குற்றம் சாட்டினால் அம்நோ ஒப்புக்கொள்ளுமா?
பிரிந்தால் என்ன பிரியாவிட்டால் என்ன, வேலையை பாருங்கப்பா.
அவர்களே இது கருத்து பதிவு செய்யும் களம்.