தாய்மொழிப்பள்ளிகளை மூடக்கூடாது, அம்னோ பேராளர்

 

no closeஅம்னோ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சாபா அம்னோ பேராளர் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படக்கூடாது என்று வாதிட்டார்.

த ஸ்டார் ஓன்லைன் செய்திப்படி, தவ்ஃபிக் அபு பாக்கார் திதிங்ஆன் என்ற அந்த பேராளார் சாபாவில் தாய்மொழிப்பள்ளிகளை மூடுவது சாத்தியமல்ல ஏனென்றால் அதிகமான பூமிபுத்ராக்கள் அப்பள்ளிகளில் பயில்கின்றனர் என்றாரவர்.

சீனமொழிப்பள்ளிகளில் பயிலும் 35,162 மாணவர்களில் 15,120 மாணவர்கள் பூமிபுத்ரா சமுகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தவ்ஃபிக் கூறினார்.

“தாவாவிலிருக்கும் ஒரு சீனப்பள்ளியின் மொத்த மாணவர்களில் 84 விழுக்காட்டினர் பூமிபுத்ரா மாணவர்கள்.

“நாம் இப்பள்ளிகளை மூடிவிட்டால், அவர்கள் எங்கே போவார்கள்”, என்று அவரை மேர்கோள் காட்டிய செய்தி கூறுகிறது.

மாறாக, தாய்மொழிப்பள்ளிகளில் தேசியமொழிப் போதனையின் தரத்தை உயர்த்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றாரவர்.

“அவர்கள் எந்தப் பள்ளியில் படித்தாலும் சரி, அனைத்து மலேசியர்களும் தேசிய மொழியில் சரளமாக பேச வேண்டும் என்பதை நாம் விரும்புகிறோம், என்றாரவர்.