மனிதவள அமைச்சை அம்னோ அதன் பாரிசான் நேசனல் பங்காளித்துவ கட்சியான சரவாக் யுனைட்டெட் பியுபில்ஸ் பார்ட்டியிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஓர் அம்னோ பேராளர் வலியுறுத்தினார்.
அம்னோ பொதுக்கூட்டத்தின் கடைசி நாளான இன்று காலையில் பேசிய சைபுல் ஹாஸிஸி தனியார்துறையில் மலாய்க்காரர்களுக்கு எதிராக வேறுபாடுகள் காட்டப்படுவதால் இது தேவைப்படுகிறது என்றார்.
“சமூக-பொருளாதார சமநிலைக்கு பங்களிக்காத தனியார்துறையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்”, என்றாரவர்.
மலாய்க்காரர்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மனிதவள அமைச்சை அம்னோ மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அம்னோ தலைவரின் கொள்கை உரை மீதான விவாதத்தில் கருத்துரைத்த அவர் இவ்வாறு கூறினார்.
மனித வள அமைச்சை அம்னோ எடுக்காமலே அரசாங்க வேலைகள் எல்லாம் மலாய்க்காரர்கள் கையில் ,தொழிற்சாலையில் எல்லாம் சீனன் கையில் அவன் எப்படி
எல்லா பொறுப்பையும் உங்களுக்கே கொடுப்பான் .
அட எல்லா அமைச்சர் பதவியையும் அம்நோவே எடுத்துக் கொண்டாலும் மாறப் போவது ஒன்றுமில்லை. ம.இ.க., ம.சீ.ச. கெராக்கான் இப்பவே அமைச்சரவையை விட்டு விலகினால் எதிர் வரப் போகும் நாட்டின் திவால் நிலைக்கு காரணகர்த்தாவாக ஆக்கப் படுவதிலிருந்து தப்பிக்கலாம். இந்தியர், சீனர் மானம் காக்கப் படும். சிவ, சிவ.
எது இல்லையோ அதுக்கு போராடுவது நியாயம்தான் வளம் என்பது உலக எல்லா வளமும் மேலே உள்ளதையும் வளக்கணும்.
அம்நோவுடன் கூட்டனி வைத்திருக்கும் கட்சிகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
அரசாங்கத்துறையில் இந்தியர்களுக்கு எதிராக வேறுபாடுகள் காட்டப்படுவது குறித்து பேசியிருந்தால் கைதட்டிருக்களாம் !கடந்த பொதுத்தேர்தலில் சபா.சரவாக் 40க்கு மேற்ப்பட்ட mp சீட்டுகளால் தான் அம்னோ இன்று உயிரோடு இருக்குது மறந்து போச்சா சைபுல் அவர்களே !
எல்லாமே உங்களுக்கு தாண்ட ! எடுதுகொளுங்கள் !
மற்றவர்கள் எப்படி போனால் உங்களுக்கு என்னே ! மா இ கா தலைவர்களே தைவசெஞ்சு வாய்தோரணங்க அப்பா! நாங்களும் மலேசியர்கள்தன.நஜிபவர்களே! எங்கள் உரிமைகள் எங்க?
உண்மைதான் ,சுப்ரா ஒரு சோம்பேறி ,அவருக்கு பதிலாக சுஸ்ருசுருப்புமிக்க ஒருவரை தேர்தெடுங்கள்
எல்லாதையும் இந்த வலையங்கட்டி கிட்ட குடுங்க.
தனியார் துறையை நொடிக்க வச்சிடுவனுங்க.