குவான் எங்: வெளிப்படையாக அவமதிக்கும் அம்னோவுடன் தொடர்ந்து இருக்கத்தான் வேண்டுமா?

lomபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,   நடந்த முடிந்த அம்னோ  ஆண்டுக்கூட்டத்தில்  மலேசியாவின்  சிறுபான்மை  இனங்கள்மீது  “வெறுப்பைக் கக்கிய”  அம்னோவுடன்  கூட்டு  வைத்துள்ள  பிஎன்  பங்காளிக்கட்சிகளைக்  கண்டித்துள்ளார்.

“சீன வாக்குகளை  வெற்றிபெற  முடியும்  என்ற  எண்ணத்தை  அம்னோ  கைவிட்டிருக்கிறது. அதனால் அவர்களை  ஏளனப்படுத்துகிறது,  அவர்களைப்  பற்றிப்  பொய்களைக்  கூறுகிறது,  அவமதிக்கிறது.

“மசீச-வும்  கெராக்கானும்  மஇகா-வும்   தங்களுக்கு  மானம்,  மரியாதை  கொஞ்சமும்  இல்லை  என்பதைக்  காண்பித்துக்  கொண்டுதான்  சாமானிய  மலேசியர்களை  உருட்டுவதும்  மிரட்டுவதுமாகவுள்ள  ஒரு  இனவாத,  தீவிரவாதக்  கட்சியுடன்  தொடர்ந்து  ஒட்டிக்கொண்டு  இருக்கின்றன”, என  லிம்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

பினாங்கு   சீனர்களின்  வெற்றிக்கு  சட்டவிரோத  தொழில்கள்  உதவுகின்றன  என்று  கூறிய  பெர்மாத்தாங்  பாவ்  தொகுதி  அம்னோ  தலைவர்  முகம்மட்  சைடி  முகம்மட்  சைட்-டையும்  லிம்  சாடினார்.

“பினாங்கில்  சீனரோ, மலாய்க்காரரோ,  இந்தியரோ  நேர்மையாகவும்  கடுமையாகவும்  உழைத்தால்  வெற்றிபெற  முடியும்”, என்றார்.