விவேகனந்தா ஆசிரமம்: இப்போதெல்லாம் வரலாற்றுக்கான முக்கியத்துவத்தை விட வாணிக நோக்கம் வலுவானது

 

ashramகோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் விவேகனந்தா ஆசிரமம் அமைந்துள்ள இடத்தை மேம்படுத்தி 23 மாடி கொண்டோ கட்டுவதற்கு அதன் அறங்காவலர்கள் வரைந்திருக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்றும், அங்கு ஓர் எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தை விவேகானந்தா ஆசிரமத்தை காப்பற்றுவதற்கான நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த வியாழக்கிழமை, இக்குழுவினர் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸை நாடாளுமன்றத்தில் சந்தித்து அவரிடம் ஒரு மகஜரை அளித்தனர்.

அமைச்சருடனான அச்சந்திப்பிலும், இன்றைய எதிர்ப்புக் கூட்டத்திலும் கலந்து கொண்ட டிஎபிnazri1 நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன், இந்த ஆசிரமத்தை தேசிய பாரம்பரிய சொத்தாக அறிவிக்குமாறு அமைச்சர் நஸ்ரி கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னானிடம் பேசிவிட்டதாகத் தெரிவித்தார்.

இந்த வரலாற்றுப்பூர்வமான இடம் பாதுகாக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அளித்திருக்கும் வாக்குறுதி kulaமகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய குலா, “ஆனால் நல்ல நோக்கத்துடன் அளிக்கப்பட்டிருக்கும் இந்த வாக்குறுதியை நாம் நம்பி இருக்க முடியாது, ஏனென்றால் இபோதெல்லாம் வாணிக நோக்கங்கள் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகிய நோக்கங்களை விட சக்தி வாய்ந்தவைகளாக இருக்கின்றன”, என்றார்.

“நாம் மக்களின் பரவலான ஈடுபாடு மற்றும் அக்கறை ஆகியவற்றை ஈர்க்க வேண்டும். இந்த சமய மற்றும் கலாச்சார நினைவுச் சின்னம் நமது எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டியதின் முக்கியத்தை மக்களுக்கு ஊட்ட வேண்டும்”, என்று குலா கூறினார்.