சாபா கள்ளக்குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணைய(ஆர்சிஐ) அறிக்கையில் “தெரிவிக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகள் அரசாங்கத்துக்குப் பிடிக்கவில்லைபோலும்” அதனால்தான் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார் ஆணையத்திடம் சாட்சியமளித்துள்ள முக்கிய சாட்சிகளில் ஒருவர்.
“கடந்த டிசம்பரில் அது தயாராகி விட்டது. மே 21-இல் பேரரசரிடம் கொடுக்கப்பட்டது. இன்று வரை அதில் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியவில்லை. அறிந்தவர்களும் தெரிவிக்க விரும்பவில்லை”, என்று தம் பெயரைக் குறிப்பிட விரும்பாத அச்சாட்சி கூறினார்.
உண்மையை சொல்ல கசக்கும்தானே? ஆனால் உண்மை வெளிவரும்.அப்பொழுது பெரிய திமிங்கலம் எல்லாம் மாட்டும்.