சர்ச்சைக்குரிய ரேப் இசைக்கலைஞரும் படத்தயாரிப்பாளரும், நாம்வீ என்ற பெயரில் பிரபலமாக விளங்குபவருமான வீ மிங் சீ, 2009-இல் தெனாகா நேசனல் பெர்ஹாட் ஊழியர் ஒருவரை இழிவுபடுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அக்குற்றத்துக்காக மூவார் செசன்ஸ் நீதிமன்றம் மூன்று மாதச் சிறை அல்லது மூன்று மாத சமூகச் சேவைகள் எனத் தீர்ப்பளித்தது.
அவர் சமூகச் சேவை செய்வதைத் தேர்ந்தெடுத்ததாக சின் சியு டெய்லி கூறியது.
2009, அக்டோபர் 26-இல், டிஎன்பி அதிகாரியான வான் முகம்மட் பைசல் வான் ஹமட்டை, அவரது அலுவலகத்தில் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக வீ மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.