தேச நிந்தனைச் சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முடிவினால் ஊழல், மோசடி, அதிகாரமீறல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவது சிரமமாகலாம்.
“அச்சட்டம் மேலும் வலுப்படுத்தப்படும் என்றவர் கூறியிருப்பது பேச்சுரிமையை மட்டுமல்லாமல் ஊழல், அதிகாரமீறல்கள் பற்றிய தகவல் பரப்பலையும் கட்டுப்படுத்தும்”, என ஊழல்- தடுப்புக்காகப் போராடும் National Oversight and Whistleblowers (நவ்) கூறியது.
அச்சட்டம் வலுப்படுத்தப்படுவதை அடுத்து, அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல், மோசடி விவகாரங்களை அம்பலப்படுத்துவோர்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்ட முடியும் என அதன் இயக்குனர் அக்மால் நாசிர் கூறினார்.
கூலிப்படை ஊழல் வேண்டும்,
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க
முடியாது ,அது போல லஞ்சம் வாங்குகிறவர்கள் திருந்தாவிட்டால் எந்த சட்டத்தாலும் திருத்த அல்லது
ஒழிக்க முடியாது .
நாங்கள் போடும் சட்டம் எங்களை பாதுகாக்க ……