கிட்டிங்கான்: முதலில் தீவிரவாதிகளைக் கைது செய்யுங்கள்

jefபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட் ஹமிடியும்,  சாபா  விவகாரம் தொடர்பில்  யாரையும்  கைது   செய்யுமுன்னர்  கள்ளக்குடியேறிகளுக்கு  போலி  அடையாள  அட்டைகளையும்  மைகார்டுகளையும்  கொடுத்து  அவர்களை  வாக்காளர்  பட்டியலிலும்  இடம்பெறவைத்த ‘துரோகிகளையும்  கயவர்களையும்’   கைது  செய்ய  வேண்டும்  என  சாபா சீர்திருத்தக் கட்சி (ஸ்டார்)  தலைவர்  ஜெப்ரி  கிட்டிங்கான்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“கூடவே, மற்றவர்களின்  சட்டப்பூர்வ  உரிமைகளைக்  காலில்  போட்டு  மிதிக்கும்  கடும்போக்குக்  கொண்ட  மலாய்க்காரர்களையும் தீவிரவாதிகளையும்  இனவெறியர்களையும்  கைது  செய்ய  வேண்டும்”, என்றாரவர்.

இவர்கள், தங்களின்  உரிமைகள்  நிலைநிறுத்தப்பட  வேண்டும்  எனவும்  மலேசியா  ஒப்பந்தத்தை  மறுஆய்வு  செய்ய  வேண்டும் எனவும்  கோரிக்கை  விடும்  கிழக்கு  மலேசியர்களை  விடவும்  ஆபத்தானவர்கள். தேச  நிந்தனைச்  சட்டம்  பயன்படுத்தப்படும்  என  உள்துறை  அமைச்சர்  விடுத்துள்ள  மிரட்டலுக்கு  எதிர்வினையாக  ஜெப்ரி  இவ்வாறு  கூறினார்.