கெராக்கான்: அம்னோ பேராளர்கள்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்டுக

baljitஅரசாங்கம்  தேச  நிந்தனைச்  சட்டத்தைச்  செயல்படுத்துவதில்  நியாயமாக  நடந்துகொள்ள  வேண்டும்  என  வலியுறுத்திய  கெராக்கானின்  பல்ஜிட் சிங்,  அம்னோ  பேராளர்கள்  முகம்மட்  ஜைடி முகம்மட்  சைட், மஷிடா  இப்ராகிம்  ஆகியோருடன் பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலியையும்  கூண்டிலேற்ற வேண்டும்  எனக்  கூறினார்.

ஆள் பார்த்துத்தான்  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படுகிறது என்ற  கருத்து பரவலாக  நிலவுகிறது என்றும்  அக்குறைகூறல்  .

“நீதி  வெற்றிபெற  வேண்டும்  என அக்கட்சியின்  சட்ட, மனித  உரிமை  பிரிவுத்  தலைவர்  பல்ஜிட்  கேட்டுக்கொண்டார்.  சட்டத்துறை  தலைவர்  அலுவலகத்துக்குக்  கிடைத்துள்ள  ஒரு நல்ல வாய்ப்பு. அது  இப்ராகிம்,  முகம்மட்  ஜைடி,  மஷிடா  ஆகியோருக்கு  எதிராகவும்  தேச  நிந்தனை  வாய்ந்த  கருத்துகளைச்  சொல்லியும்  நடவடிக்கை  எடுக்கப்படாதிருக்கும்  வேறு  முக்கிய  பிரமுகர்கள்மீதும்  நடவடிக்கைகளைத்  தொடங்குவதன்வழி  ஆள்பார்த்து  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படுவதாகக்  கூறப்படும் புகார்களைப்  பொய்யாக்கலாம்”, என்றவர்  குரிப்பிட்டார்.