மலாய்க்காரர்-அல்லாதார் “சமுதாய ஒப்பந்தத்தை” மதிக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கேட்டுக்கொண்டிருப்பதை “இனவாதப் பேச்சு” என்று வருணித்துள்ள பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட்டை மலாய் உரிமைக்காகப் போராடும் பெர்காசா கண்டித்துள்ளது.
மலாய்க்காரர் உரிமைகளைப் பாதுகாக்க முனைவது இனவாதமல்ல என்று கூறிய பெர்காசா உச்சமன்ற உறுப்பினர் அஸ்ருல் அக்மால் சஹாருடின், இன்று மலாய்க்காரர்கள் பொருளாதாரத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்கள் என்பது கற்பனையல்ல என்றார்.
“மலேசியாவில், யாராவது சமயத்தை, இனத்தை, நாட்டைத் தற்காத்துப் பேசினால் போதும், உடனே அவர் வாயை அடக்க இனவாதி என முத்திரை குத்தி விடுவார்கள்”, என்றாரவர்.
நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லுகிறீர்கள்! அது தான் வித்தியாசம்!
தவளை கத்துவது மழைக்காக அல்ல… பாம்புக்கு அறிவிக்க அப்படித்தானே ? பொறு பாம்பு வரும்..!
மலாய் இனத்தை தற்காத்து கொள்வதற்கோ , வளர்ப்பதர்க்கோ பெர்க்காசாக்காரன் எதையாவது செய்துக் கொள்ளட்டும். அதற்காக மற்ற இனங்களை தரக் குறைவாக பேசுவதும் , பழிப்பதும் என்ன நியாயம்…? அதைத்தான் நாங்கள் கண்டிக்கின்றோம்.