அன்னிய முதலீட்டுக்கு உள்நாட்டுப் பங்காளி தேவை என்ற நிபந்தனையை இரத்துச் செய்வீர்

mayorமலேசியாவில்  முதலீடு  செய்ய  விரும்பும்  அன்னிய  நிறுவனங்கள் உள்நாட்டு  நிறுவனமொன்றைப்  பங்கு  சேர்த்துக்கொள்ள  வேண்டும்  என்ற  கொள்கையை  நீக்க  வேண்டும்  என்று  லண்டன்  மேயர்  போரிஸ்  ஜான்சன்  பரிந்துரைத்துள்ளார்.

நேற்றிரவு கஜானாவின் உலகளாவிய  சொற்பொழிவு  நிகழ்வில்  உரையாற்றிய  அவர், “இந்த  ஆலோசனையைப்  பரிசீலிக்க  வேண்டும்”, எனப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கேட்டுக்கொண்டார்.

லண்டன் மாநகர்  பல  ஆண்டுகளுக்கு  முன்பே  இப்படிப்பட்ட  கொள்கையை  அகற்ற  முடிவு  செய்ததைச்  சுட்டிக்காட்டிய  அவர், அதன்  விளைவாக  உள்நாட்டுத்  திறன்கள்  ஒதுக்கப்படவில்லை  என்றார். மாறாக, அது  தொழில்  பெருக்கத்தைத்  தூண்டியது, இலட்சக்கணக்கான  வேலைவாய்ப்பை  உருவாக்கியது  என்றார்.