மலேசியாவில் உள்ள உடல்குறையுடையோருக்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற நிலைதான் இன்னமும் உள்ளதாம்.
மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), அனைத்துலக உடல்குறையுடையோர் தினத்தையொட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளது.
“மலேசியாவில், உடல்குறையுடையோருக்குத் தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மற்றவற்றோடு பொதுக் கல்விமுறையில், பொது, தனியார் துறைகளில் வேலைக்குச் சேர்த்தல் போன்றவற்றிலும் அவர்களின் உரிமைகள் கவனிக்கப்படுவதில்லை”, என சுஹாகாமின் இடைக்காலத் தலைவர் டாக்டர் காவ் லேக் டீ கூறினார்.
அவர்களின் உரிமைகளை வலியுறுத்தும் சட்டங்கள் இருந்தாலும் முறையான கண்காணிப்பு இல்லாததால் அவர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவது தொடர்கிறது என்றாரவர்.