பங்குச் சந்தையில் பல இழப்புகளைக் கண்டுள்ள பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹொல்டிங் (எப்ஜிவி) மற்றொரு மலேசிய விமான நிறுவனம் ஆகும் சாத்தியம் உள்ளது.
“எப்ஜிவி-க்கு ஆகக் கடைசியாக ஏற்பட்டுள்ள இழப்பு மலேசிய விமான நிறுவனத்தைப்போல் அதுவும் நிதித்தொல்லைகளால் வீழ்ச்சி காணலாம் என்பதற்கான அறிகுறி”, என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறினார்.
அதன் அடைவுநிலை “மிக மோசமானது” என்றும் “முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது” என்றும் அவர் சொன்னார்.
“மிகுந்த ஆரவாரத்துடன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹோல்டிங்ஸ், கடந்த வாரம் வெளியிட்ட 2014, செப்டம்பருடன் முடிந்த அதன் முதல் காலாண்டு அறிக்கையில் ரிம12 மில்லியன் இழப்பை அறிவித்துள்ளது” என்றாரவர்.
பங்குச் சந்தையில் பட்டியலில் உள்ள தோட்டத்துறை பங்குகளில் கடந்த ஆறு மாதங்களில் மிகவும் மோசமான அடைவுநிலை கண்ட நிறுவனம் எப்ஜிவி-தான் என்றும் அவர் சொன்னார்.
12 மிலியன் இவ்வளோ தானே ! எந்த இழப்பையும் சமாளிக்க மக்களின் நிலம் அடகுக்கு ரெடி. பங்கு சந்தை வங்கி கணக்கு எல்லாம் கடன் எல்லாம் fully செகிறேத், தோட்டத்து பாலும் பழமும் நல்ல முதலீடுதான்.
வாழ்த்துக்கள் !