உணர்ச்சிவசப்பட வைக்கும் விவகாரங்களை எழுப்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்ட பின்னரும் அம்னோ பேரவையில் அவற்றை எழுப்பியவர்களை அம்னோ விசாரிக்கலாம் விசாரிக்காமலும் போகலாம்.
அது பற்றி கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரிடம் வினவியதற்கு அவரால் திட்டவட்டமாக பதில் அளிக்க முடியவில்லை.
“பார்ப்போம்”, என்று மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.
பேராளர் கூட்டத்துக்கு முன்பே, கூட்டரசு பிரதேச அமைச்சருமான தெங்கு அட்னான், பேராளர்கள் இனம், சமயம் தொடர்பான விவகாரங்கள் பற்றிப் பேச வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.
ஆனால், சில பேராளர்கள் அதைப் புறந்தள்ளிவிட்டு அவை பற்றிப் பேசினார்கள்.
‘அவற்றை எழுப்பியவர்களை அம்னோ விசாரிக்கலாம் விசாரிக்காமலும் போகலாம்.’ அப்படி விசாரித்தால்? அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் பதவி உயர்வும், மற்றவர்களாக இருந்தால் அரசாங்க காண்ட்ராக்ட்; மற்றும் நிலம் போன்றவை வழங்கப்படும், சரிதானே? தண்டனை வழங்குவதாக இருந்தால், அப்படிப் பேசியவர்களை அடுத்த நாள் மாநாட்டுக்கு வராமல் தடுத்திருக்க வேண்டும் அல்லவா? அதைச் செய்யாமல் இது ஏதோ ‘பொண்டாட்டி மெச்சிக்க….. ன்னு சொன்ன கதையா இல்லே இருக்கு? கூரை ஏறி கோழி பிடிக்க வக்கில்லாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?
வேறு என்ன பேசத்தெரியும்.தலைச்சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! பேரவையில் தலையே அறிவுபூர்வமாக பேசும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே !
சாமிவேலு மாரி மைக்க அடைச்சி இருக்கலாமே ! மாநாட்டில் கட்சி தலைவரும் அவருதான் மாநாட்டு அவைத தலைவரும் அவர்தான்.
மைக் சுவிட்ச் அவர் கீழே இருக்கும் . இந்த டெக்னிக் தெரியாதா? மாநாட்டில் மேடை நாடகம் ஒன்று இருக்கனும் இல்லாட்டி இப்படிதான் கீழே பதில் சொல்லனும்!
கூட்டி கழித்துப் பார்த்தால் நடந்தது அம்னோ ஆண்டு பேரவை அல்ல.இனத்துவேச பேரவை என்றால் பொருத்தமாக இருக்கும்!
இதுவும் அரசானை ஆணையத்தின் அறிக்கை போன்று உப்பு சப்பு இல்லாமல் இருக்கும் என்பதில் எங்களுக்கு சிறிதளவும் டவுட் இல்லை.
அவர்கள் உங்களையே புறந்தள்ளிவிட்டார்கள்! உங்கள் விசாரணையைப் புறந்தள்ளஅவர்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?
விவேகானந்தர் கட்டிடம் நிலைநிறுத்த மக்கள் போராடுகிறார்கள். அனால் உங்கள் மாநகர் மன்றம் மேம்பாடுக்கு அனுமதி வழங்கியுள்ளதே ? முதலில் அதை கவனியுங்கள் அமைச்சரே ‘
அம்னோ மாநாட்டில் பேசியவனை அங்கேயே தண்டிக்காமல் விட்டு விட்டு இனிமேல்தான் விசாரிக்க போறிங்களா..? நல்லா இருக்கு உங்க விசாரணை..?
கடந்த 57 ஆண்டுகளில் எத்தனை முறை நம்மை இழிவு படுத்தி பேசி இருக்கின்றான் கள்? இது ஒரு தொடர் கதை — MIC – ஈன ஜென்மங்களுக்கு சூடு சொரணை மானம் ஈனம் ஒன்றுமே கிடையாது- முதுகு எழும்பில்லா கேடு கெட்ட பிண்டங்கள்.