அட்னான்: நடப்புப் பெயர்கள் அர்த்தமற்றவை

jalanகோலாலும்பூர்  சாலைகளுக்கு  இப்போதுள்ள  பெயர்கள்  பொருளற்றவை  என்பதால்  அவற்றை  நீக்கிப்  பேரரசர்களின்  பெயர்கள் வைக்கப்படுவதாகக்  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான் தெங்கு  மன்சூர்  கூறினார்.

இதற்குமுன்  கோலாலும்பூரில்  இரண்டு  சாலைகள்  மட்டுமே  சுல்தான்களின்  பெயர்களைக் கொண்டிருந்ததாக  அவர்  சொன்னார்.

“ஜாலான்  மஹாமேரு. ‘மஹாமேரு’  என்றால்  என்ன? மாமெரி  ஓராங்  அஸ்லி  மக்கள்  பற்றி  எனக்குத் தெரியும். ஆனால்,  ஜாலான் மஹாமேரு?  என்னவென்று தெரியவில்லை. (பெயரை) மாற்றுவதில்  என்ன  தப்பு? இதைத்  தொடர்வோம்”, என்றாரவர்.

இதை  யாரும்  அரசியலாக்கக்  கூடாது.  அரசாங்கம்  ஒரு  சாலையின்  வரலாற்றுப்  பூர்வமான  பெயரை  மாற்றுவதோ, சாலைகளுக்குத்  தன்  பெயரை  வைத்துக்கொள்வதுதான்  தப்பு  என்றாரவர்.