குடியேறிகளுக்குக் குடியுரிமையை அள்ளிக்கொடுப்பது உண்மை என்றால் பிஎன் நீண்ட காலத்துக்கு முன்பே கிளந்தானை வென்றிருக்கும் என்கிறார் கிராம, வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ஷாபி அப்டால்.
சாபாவில் குடியேறிகளுக்குப் பெருமளவில் குடியுரிமை வழங்கியதில் பிஎன்னும் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுவதை மறுத்த அமைச்சர், பிஎன் அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதில்லை என்றார்.
“அது (குடியுரிமை வழங்குவது) எங்கள் வேலை அல்ல, அப்படிப்பட்ட காரியத்தைச் செய்ய மாட்டோம். அதைச் செய்வதாக இருந்தால் கிளந்தானை நீண்ட காலத்துக்கு முன்பே பிடித்திருப்போம்”, எனச் செய்தியாளர்களிடம் ஷாபி கூறினார்.
அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருகிறதா ???
கிளாந்தானை எதிர்கட்சி ஆண்டாலும் அது மலாய்க்காரர்கள் ஆட்சியில்தானே உள்ளது. ஆனால் சபாவின் கதை அப்படியல்ல. கிறிஸ்தவர்களால் அப்பொழுது ஆளப்பட்டது. இப்பொழுது ????????
‘குடியேறிகளுக்குக் குடியுரிமையை அள்ளிக்கொடுப்பது உண்மை என்றால் BN. நீண்ட காலத்துக்கு முன்பே கிளந்தானை வென்றிருக்கும்’ – இதன் அர்த்தம் என்ன? இந்த அனுபவம் (கள்ளக் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கும் அனுபவம்) ஏற்கனவே உள்ளது என்பது தானே?. இப்ப எங்க அப்பன் குதிருக்குள்ளே இல்லை சொன்னால் அதை நம்ப இரண்டு சோணகிரிகள் தான் இங்கே உள்ளன. அது சரி. கொஞ்ச நாளைக்கு முன் சாபாவில் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கியதில் (பாரிசானில் இருந்த போது) அன்வாருக்கும் பங்கு உண்டு என்று முன்னாள் பிரதமர் ஒருவர் இதற்கு முன்னால் சொன்னதை மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நினைப்பா?
என்ன சார் சாபா மக்கள் மாங்கா மடையர்கள் என்று நினைத்து விட்டாயா?
நாகேஷ்வரா சபா சரவாக் மாநிலங்களில் வேலை பார்துலேன் நீர் சொல்வது உண்மை தான் மாங்கா மடையர்கள்
அது முக்கியம் இல்லை! இப்போது வாரிக்கொடுக்கிறீர்களே அது சிலாங்கூரைப் பிடிக்கத்தானே!
வாய மூடு அங்கு தான் உங்கள் ஜம்பம் பலிக்கவில்லையே !!
விட்டால் கிளாந்தானிலும் சயாமிய பட்டாணி மக்களை கொண்டு வந்து அடையாள அட்டை கொடுத்து ஒட்டு போட அப்புறம் கிளாந்தான் மக்கள் பட்டாணியுடன் சேர்ந்து பிரிந்து போய் விடுவர் என்ற பயத்தில் இதனைச் செய்யவில்லையோ என்னவோ?.