அன்வார் வழக்கில் தீர்ப்பளிக்கும் நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை

justiceஆறு  ஆண்டுகளுக்குமுன்  குதப்புணர்ச்சி  வழக்கில்  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட  தீர்ப்பைத்  தள்ளுபடி  செய்ய  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  செய்துகொண்ட  மேல்முறையீடு மீதான  தீர்ப்பு  கூட்டரசு  நீதிமன்றத்தில் தயாராகிக்  கொண்டிருக்கிறது.

அதற்குமேல்  முறையீடு  செய்ய  இடமில்லை  என்பதால்  இந்த  இறுதி மேல்முறையீடு  மீதான   தீர்ப்பை  நாடே  ஆவலுடன்  எதிர்பார்த்துக்  காத்திருக்கிறது. ஆனால்,  என்று  தீர்ப்பு  சொல்லப்படும்  என்பதுதான்  எவருக்கும்  தெரியவில்லை.  தலைமை  நீதிபதி  அரிபின்  ஜக்கரியாவுக்குக்கூட  அது  தெரியவில்லை.

“சரியான தேதியை  என்னால் கூற  முடியாது. வாதத்  தொகுப்புகளைப்  படித்துக்  கொண்டிருக்கிறோம். தீர்ப்பு  எழுதுமுன்னர் அவற்றைப் படிக்க வேண்டும், பிறகு  (தீர்ப்பு) எழுத  வேண்டும்”, என்றாரவர்.

முறையீட்டு  நீதிமன்றத்திலும்  கூட்டரசு  நீதிமன்றத்திலும் வழக்கு  முடிந்த  மூன்று  மாதங்களில் தீர்ப்பளிக்கப்படுவது  வழக்கம்  என்றாரவர்.

“ஆனால், சில  வழக்குகளில்  கூடுதல்  காலம்  ஆகலாம்,  ஆறு  மாதங்கள்கூட  பிடிக்கலாம்.  வழக்கு சிக்கல்மிக்கதாக  இருந்தால்  அப்படி  நடக்கும்”,என்றவர்  கூறினார்.