சாபா கள்ளக்குடியேறிகள் மீது அரச விசாரணை ஆணைய (ஆசிஐ) அறிக்கை வெளியாகியிருப்பதை அடுத்து அரசாங்கம் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா இளைஞர் பகுதி கேட்டுக்கொண்டிருக்கிறது.
“சட்டத்தின் முழு வீச்சையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டும். எவ்வளவு காலமானாலும் பரவாயில்லை.
“வாக்காளர் பட்டியலில் உள்ள சட்டவிரோத பெயர்களையும் நீக்க வேண்டும்”, என்று அதன் தலைவர் சி.சிவராஜா நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய அதிகாரிகளையும் விட்டு வைக்கக் கூடாது என்றாரவர்.
பரவாயில்லை! நீங்களும் அறிக்கை விடுகிறீர்களே! தேர்தல் முடிந்த பிறகு ஒரு வேலை அரசாங்கம் யோசிக்கலாம்!
MIC குரல் கொடுக்கிறது ,வாழ்க MIC
இப்படி எல்லாம் அறிக்கை விடாத அப்பறம் உன்னை கச்சியில் இருந்து தூக்கிடுவாங்க …….. எது செஞ்சாலும் PLAN பண்ணி செய்யணும் புரியுதா
அடையாள அட்டை தேசிய பிரச்னை அவர்கள் பார்கட்டும்.நம் இளைஞர்களுக்கு எம் ஐ சி மூலம் ஏதேனும் செய்ய ஆவன செய்யுங்கள்.
இப்படி ஒரு அறிகையை மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் இலஞ்சர் பகுதி தலைவரிடம் தற்பொழுது வந்திருப்பது அரசியல் நடாகமே ! அப்படி என்றால் இதுவரையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் கள்ள குடியேறிகளின் பெயரும் இடம் பெற்று இருந்ததை பகிங்கிரமாக ஒற்றுகொல்கிறார் இந்த இலஞ்சர் பகுதி தலைவர் .பொதுதேர்தலுக்கு முன்பு உங்களிடம் இருந்து இந்த அறிக்கை வந்து இருந்தால் உங்களின் நம்பகத்தன்மை
கேள்விகுறியாக இருந்திருக்காது .ஒருவேளை ம இ கா இந்த இலஞ்சர் பகுதி தலைவருக்கு வழங்கிய தொகுதியில் இவர் வென்று இருந்தால் இந்த அறிகையை இவர் இவ்வளவு தைரியாமாக விட்டு இருப்பாரா ? காரணம் இதுநாள் வரையில் கள்ள குடியேறிகளின் வாக்குகளே பரிசான் அரசாங்கம் ஆட்சியை தக்க வைத்துகொள்ள உதவியது போல் இருக்கிறது இந்த இலஞ்சர் பகுதி தலைவரின் அறிக்கை .இதைத்தானே அம்பிகாவும் சொன்னார் எத்தனை எத்தனை போராட்டங்களை நடத்தினார் ? எவ்வளவு அவமானங்களை அவர் சுமந்தார் ,எவன் எவனோ அவர் வீட்டு முன்பு டிக்கி லோனா ஆட்டம் போட்டான் .அப்பொழுது எல்லாம் இப்படி ஒரு அறிகையை விட எந்த துணிவு இல்லாமல் போனதன் மர்மம் என்ன ? இவ்வளுவு நாட்கள் கள்ளகுடியேறிகளின் தயவால்தான் ஆட்சியை தக்க வைத்து கொண்டீர்களா ? உங்கள் குற்றுபடி பார்த்தல் கேமரன்மலையில் எத்தனை கள்ளகுடியேறிகளை ஏற்றுமதி செய்து வாக்காளர் பட்டியலில் இவர்களின் அவர்களின் பெயர்களையும் இணைத்து கொண்டு வாக்களிக்க வைத்து பரிசான் வெற்றி பெற்று இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது . இதை நான் சொல்லவில்லை இந்த இலஞ்சர் பகுதி தலைவரின் அறிக்கை என்னை அப்படி யோசிக்க வைக்கிறது .இவர்தானே சொல்கிறார் தேர்தல் ஆணையம் கள்ளகுடியேறிகளின் பெயரை அகற்ற வேண்டும் என்று .தேர்தல் ஆணையம் எதற்க்கு கள்ளகுடியேறிகளின் பெயரை வாக்காளர் பட்டியலில் வைத்து இருக்கவேண்டும் ? சக்தியின் மகன்
சி.சிவராஜா அவர்களே.கேட்காவிட்டால் தொடை நடுங்கி என்று சொல்வார்கள்…கேட்டுவிட்டாலோ அதற்கும் 48 வியாக்கியானம் சொல்வார்கள்..இது புல்லுருவிகூட்டம். எதற்கும் தயங்காமல் தவறு என்று உங்களுக்குப் பட்டால் குரல் கொடுங்கள். ம.இ.கா வில் மட்டும் அல்ல வெளியில் இருந்தும் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். குள்ளநரிக்கூட்டம் ஒன்று குறுக்கிடும். நல்லவர்க்கு தொல்லை தடுத்திடும்.
MIC வாழ்க ,,மீண்டும் எல்லாம் தமிழர்களும் MIC சிக்கு ஆதரவு அளிப்போம்
சரவணன் நீங்கள் சொல்வது 100% சரி. அது இருக்கட்டும் கள்ள குடியேறிகள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது உண்மை என்றால் அப்போ அந்த தேர்தால் செல்லாதோ!!!!
தேர்தல் நேரத்தில் மின்சாரம் துண்டிப்பு,அந்நியர்கள் வாக்களிப்பு,கள்ள குடியேறிகள் அடையாள அட்டை இப்படி என்னும் எத்தனையோ அடுளியங்கள் நடந்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கை எடுக்காதது வெளியே பயிர் மேய்ந்த கதைதான். இன்று நேற்று அல்ல , மகாதிர் காலத்திருந்து தொடர்கதைதான் .சாபா மாநிலத்தில் தொடக்கம் அணைத்து மாநிலத்திலும் நடைமுறை.
சரவணன் ,இவ்வளவு நாட்கள் நடுங்கி கொண்டுதான் இருந்தார்களோ ?இப்பொழுதுதான் நடுக்கம் நின்றதோ ? தேர்தல் ஆணையத்திடம் இது மாதிரி டத்தோ அம்பிகா கோரிக்கைகள் அவர் நடத்திய போராட்டங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து இருக்க மாட்டார்கள் ,மறக்கவும் மாட்டார்கள் ,கேட்க வேண்டும் என்றால் சரியான நேரத்தில் சரியாக நெற்றி அடியாக கேட்க வேண்டும் ,அதுதான் நியாயம் தர்மம் எவருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்க வேண்டும் .48 வியாக்கியம் என்ன 480 வியாக்கியம் கூட சொல்லுவோம் ,அம்பிகா சொன்னால் குற்றம் மற்றவர் சொன்னால் சுற்றமா ? ஆமாம் நாங்கள் லாலானாக இருக்க விரும்பவில்லை ,அதனால் புல்லுருவியாக இருந்துட்டு போகிறோம் பராவா இல்லை ,இது தவறு என்று தற்பொழுதுதான் தெரிகிறதா ? தேர்தலுக்கு முன்பு தெரியவில்லையா ? இபோளுதுதான் தெரிகிறதா இது தப்பு என்று ? இங்கு ஆதரவு தேடுவதற்கும் ,சுயவிளம்பரம் தேடி கொள்வதற்கும் யாரும் கருத்து எழுதவரவில்லை .எனது வாதத்தில் தப்பு ஏதும் இருப்பதாக தெரியவில்லை .என்னுடைய கேள்வி பொதுதேர்தலுக்கு முன்பு அம்பிகா இதே மாதிரி ஒரு கோரிகையை வைத்த பொழுது எல்லாம் வாயை திறக்காமல் ,பொது தேர்த்தல் முடிந்தவுடன் இப்படி அறிக்கை விடுவது ஏற்றுகொள்ள முடியவில்லை ,இதே கருத்து எழுதும் பகுதியில் திரு சிவராஜ் அவர்களுக்கு ஆதரவாக நிறைய கருத்து எழுதி இருக்கிறேன் .அதில் ஞாயம் இருந்தது அதற்காக . சரவணன் உங்கள் கருத்துப்படி நாங்கள் குள்ளனரிகலாகவே இருந்துட்டு போகிறோம் ,அதற்காக உங்களுக்கு நன்றி ,ஆனால் நாங்கள் அசலான குள்ளநரியாக இருக்கிறோம் என்பது மகிழ்ச்சி ,இன்னும் சில குள்ளநரிகள் புலிதோல் போத்திக்கொண்டு புலிவேசம் போடுவதை என்னவென்று சொல்லுவது .திரு சரவணன் அவர்களே ,மனதில் தேங்கி இருக்கும் ஆதங்கம் எதிர்பார்ப்பு ,எல்லாவற்றையும் எழுதுவதற்கு செம்பருத்தி இந்த அழகான கருத்து எழுதும் பகுதியை உருவாக்கி இருக்கிறது .சில நேரங்களில் எதிர்ப்புகளை காட்டிதான் ஆகவேண்டும் .சிவராஜ் ஒரு கடுமையான போராடும் குணம் உள்ளவர் என்பது அறிவோம் . காலம் கடந்த அவரின் இந்த அறிக்கைக்கு நான் உடன் படவில்லை .அதற்காக நீங்கள் சாடையாக என்னை குள்ளநரி என்று வசைபாடியதுக்கு எனகொன்றும் அவ்வளவு வருத்தம் இல்லை .உடன் படாத கருத்தை கொஞ்சும் வசனத்தில் எழுதி நடிக்க எனக்கு வரவில்லை . மன்னிக்கவும் . சக்தியின் மகன்
MK mangkok basi நீயும் santhiyum MIC-க்கு வாக்கு அளி நாங்கள் நல்ல தமிழர்கள் மாட்டோம்
moneynarayanan விளங்குரமாதிரி எழுது……………..
அடுத்த தேர்தலில் நீங்கள் ஜெயிக்க வேண்டாமா ?.வேண்டாம் விபரிதம்அடுத்த தேர்தலில் உங்களுக்கு அவர்கள் மிக மிக அவசியம்.
அடுத்த தேர்தலுக்கு அவர்கள் மிக மிக முக்கியம்.கவனம் ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் உங்களுக்கு.
என்ன திமிர் தைரியம் மக்கள் ஆதரவு இழந்த மஇகா-வுக்கு !
ஒரு இந்திய பெண்ணுக்கு ஆதரவாக, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத போலிஸ் படை தலைவரை விமாசிக்க முடியாத மஇகா
எங்களை சீண்டுவதா ? ஜாக்கிரதை !!! ஜாக்கிரதை !!! ஜாக்கிரதை !!!
“மகச” அதாவது மலேசிய கள்ளக்குடியேறிகள் சங்க உறுப்பினர்களை
மஇகா-வுக்கு எதிராக போராட தெருவிற்கு வரவழைத்து விடாதீர்கள்.
சக்தியின் மகனே.. உனக்கு ‘சக்தி’ இருக்கும் அளவுக்கு மண்டையில் புத்தி இல்லாமல் போனது ஏனோ? நான் சிவராஜாவின் துணிச்சலைப் பாராட்டினேனே தவிர அம்பிகாவின் துணிச்சலை குறை சொன்னேனா? அல்லது மற்ற யாரைப் பற்றியாவது வம்பு பேசினேனா? உங்களுக்கு உங்கள் வாதத்தில் தப்பு இல்லை என்று எப்படித் தெரிகிறதோ அப்படியே தான் மற்றவர்களுக்கும் இருக்கும். எனது கருத்தை நீங்கள் வெட்டிப் பேசுவதையோ மறுத்துப் பேசுவதையோ நான் ஆட்சேபிக்கவில்லை. மாறாக மாற்றுக் கருத்தை நாநும் வரவேற்கிறேன். அதையே நான் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதிலும் தவறில்லையே? உங்க மனதில் தேங்கி இருக்கும் ஆதங்கம் எதிர்பார்ப்பு போல மற்றவர்கள் மனத்திலும் இருக்கக்கூடாது என்று சட்டமா என்ன? நீங்கள் கருத்து எழுதியது 4.44 மணிக்கு. நான் எழுதியது 5.12 மணிக்கு. நான் எழுதியது உங்கள் கருத்தை படித்து விட்டு அல்ல. எனவே, குள்ளநரிக்கூட்டம் என்று தடைகளை ஏற்படுத்துவோரை நான் பொதுவாகச் சொன்னது உங்களைத்தான் என்று நீங்கள் எழுதியது எனக்கு வியப்பாக இருக்கிறது. எனது கருத்து எந்த விதத்திலாவது உங்களை பாதித்துவிட்டதாக என்று நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
Saravan அவர்களே ………… இருக்கா இல்லையா என்று சோதனை செய்து பாருங்கள்……………….
வெட்டிப்பயலின் வீண்பேச்சு, மொக்கை மொண்ணை
என்னடா இது..கேட்டாலும் தப்பு ..கேட்காவிட்டாலும் தப்பு
மாங்காய் கூட்டனி மக்கைகளே ..இதெல்லாம் உங்களால்
மட்டும்தாயா முடியும்..
சி.சிவராஜா அவர்களே தங்களுடைய கருத்தை சமீபத்தில் பெர்னாமா ஹலோ மலேசியா நிகழ்ச்சியில் கேட்டேன்.நேர்மையான கருத்து,ஆழமான சிந்தனை,பொதுநல நோக்கம்,தூரபர்வை உள்ள சிந்தனை கொண்ட தலைவர்கள் ம.இ.கா வில் உள்ளதை கண்டு என்னை ஒரு கணம் திரும்பி பார்க்கச் செய்தது.வாழ்க உமது தொண்டு.
பேதலித்து உளறிக்கொண்டு இருக்கும் சரவணன் அவர்களே ! அந்தர் பல்ட்டி அடிப்பதில் நீங்கள் மிகபெரிய கில்லாடி என்பதை இந்நேரம் பலர் அறிந்து இருப்பார்கள் ? புல்லரிவிகூட்டம் கூட்டம் ,குள்ளநரிகூட்டம் என்று யாரை இந்த கருத்து எழுதும் பகுதியில் சாடி இருகின்றிர்கள் ? உங்கள் விவாதம் படி உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து எழுதுபவர்கள் குள்ளநரிகள் ,அல்லது புள்ளரிவிகள் என்பதுதானே ? அதை உங்கள் கருத்தில் இருந்து உண்மையை வாசகர்கள் அறிந்து கொள்வார்கள் ? உங்கள் மனதில் தேங்கி கிடக்கும் ஆதங்கங்களை வெட்டி எழுதுபர்களுக்கு நீங்கள் வைக்கும் பெயர் குள்ளனரியாகவும் அல்லது புள்ளரிவகள் என்பது எழுதபடாத சட்டமா ? அம்பிகாவை இங்கு நான் குறிப்பிட்டு அழுத்தமாக எழுதுவது உங்கள் மண்டையில் ஏறுவதற்காக மட்டும் இல்லை ,அன்று i அழுத்தமாக போராட்டவாதியாக சீறி எழுந்த அம்பிகாவுக்கு ஆதரவு தெரிவிக்க எந்த ஆளும்கட்சி காரருக்கும் தையிரியம் இல்லாமல் போனதின் மர்மம் என்ன என்பதை சுட்டி காட்டுவதற்கு மட்டுமே ? உங்களை மாதிரி அந்தர் பலுட்டி அடிக்க எனுக்கு தெரியாது , உங்கள் விவாதத்தின் படி மாற்று கருத்து அல்லது தடை ஏற்படும்படி கருத்துகளை எழுதுபர்கள் குள்ளநரிகள் என்பதுதானே ? நீங்கள் என்னை குறிப்பிட்டு குள்ளநரி என்று எழுதவில்லை என்று விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி .ஆனால் உங்கள் கூற்றுபடி மாற்று கருத்து அல்லது அதற்கு தடையாக இருக்கும் கருத்தாளர்கள் எல்லாம் குள்ளநரி என்றுதான் பொருள்படுகிறது .அந்த வகையில் உங்கள் பட்டியலில் நானும் இருந்திருக்க வேண்டும் . புரிகிறது நீங்கள் எப்படி என்று !