ஆர்சிஐ அறிக்கை: நம்ப முடியவில்லை கோத்தா கினாபாலு மக்களால்

rosalmசாபாவில்  அடையாள  அட்டைகள்(ஐசி) பெருமளவில்  வழங்கப்பட்டதற்கு  பணம்தான்  காரணம்  என்றும்  அரசியல்  அல்லவென்றும் அரச  விசாரணை  ஆணைய (ஆஎசிஐ) அறிக்கை கூறுவது பற்றி  என்ன  நினைக்கிறீர்கள்  என்று  கேட்டதும்  பொறியியல்  பேராசிரியரான  ரோசலாம் சர்பட்லி  கேலிச்  சிரிப்பு சிரித்தார்.

“பின்னாளில்  பணத்தாசைதான்   காரணமாக  இருந்தது  என்பது  உண்மைதான். ஆனால், தொடக்கத்தில் (குடியுரிமை  வழங்கப்பட்டதற்கு) அரசியல்தான்”, என  கோத்தா  கினாபாலுவில்  ஒரு  உணவகத்தில் ரோசலாம்  கூறினார்.

“அடுத்த  கட்ட  நடவடிக்கை, அவர்களை (சட்டவிரோதமாக  ஐசி  வழங்கியவர்கள்)  நீதிமன்றத்தில்  நிறுத்துவது. ஆனால், அரசாங்கம்  அதை  விரும்புமா?”, என்றவர் வினவினார்.

வொங்  என்னும்  அம்மையாரும்  ஆர்சிஐ  அறிக்கையைச்  செய்தித்தாள்களில்  படித்தபோது  வாய்விட்டுச்  சிரித்ததாகக்  கூறினார்.

“அதை  எப்படி  நம்பச்  சொல்கிறார்கள்? (உண்மை) எல்லாருக்கும்  தெரியும்”,  என  அந்த  50-வயது  அம்மையார்  சொன்னார்.

ஒரு  பலசரக்குக்  கடையைப்  பார்த்துக்கொள்ளும் பிலிப்பினோ  பெண் ஒருவரிடம் இது  பற்றிக்  கேட்டதற்கு, “வெளிநாட்டவர்  அதிகாரத்துவ  ஆவணங்கள்  பெறுவது  எளிது  என்பதுபோல்  காட்டியிருக்கிறார்கள். ஒருவேளை   போலி  ஐசிகளைக் காசுக்கு  வாங்கலாம். உண்மையானவை  கிடைக்கமாட்டா”, என்றார். அவர்  தம்  பெயரைத்  தெரிவிக்க  விரும்பவில்லை. 25- ஆண்டுகளாக  இந்நாட்டில்  இருந்துவரும்  அவர்  ஒவ்வோர்  ஆண்டும்  ரிம500  கொடுத்து  வருகையாளர்  அனுமதியையும்  வேலை  அனுமதியையும்  புதுப்பித்து வருகிறார்.