தேச நிந்தனைச் சட்டத்தில் அக்கறை காட்டும் அமெரிக்க அதிபர்

vpஅமெரிக்க  துணை  அதிபர்  ஜோ  பிடென், மலேசியாவில் தேச  நிந்தனைச்  சட்டத்தையும்  மற்ற  சட்டங்களையும்  பயன்படுத்தி எதிரணியினரை  ஒடுக்கப்  பார்ப்பது  கவலையளிக்கிறது  என்று  டிவிட்டரில்  பதிவிட்டிருக்கிறார்.

குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார்   இப்ராகிமின்  மேல்முறையீடு  மீது  விரைவில்  தீர்ப்பளிக்கப்பட  விருப்பது  பற்றியும்  அவர்  கருத்துரைத்தார்.

அன்வாரின்  வழக்கில்  அரசாங்கம்  தவறுகளைச்  சரிசெய்யும்  என  எதிர்பார்ப்பதாக  அவர்  சொன்னார்.

“அன்வாரின்  மேல்முறையீடு  மலேசியாவுக்கு  நிலைமைச்  சரிசெய்வதற்கும்  அதன்  ஜனநாயகம்,  நீதித்துறை  ஆகியவை மீது  நம்பிக்கையை வளர்ப்பதற்குமான  ஒரு  நல்ல  வாய்ப்பாக  அமைகிறது”, என்றாரவர்.