அமெரிக்கத் தூதர்: நஜிப்பின் பல்டி ஒரு புரியாத புதிர்

y yunதேச  நிந்தனைச்  சட்டத்தை  இரத்துச்  செய்யப்போவதாகக்  கூறிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து  பின்வாங்கி  அச்சட்டத்தை  வைத்துக்கொள்ள  முடிவு  செய்ததால்  அமெரிக்காவே  “குழம்பிப்போயிருப்பதாக”க்  கூறுகிறார்  அமெரிக்கத்  தூதர்  ஜோசப்  ஒய்  யுன்.

“அரசாங்கம்  தேச  நிந்தனைச்  சட்டம்  மீட்டுக்கொள்ளப்பட்டு  அதனிடத்தில்  தேசிய  நல்லிணக்கச்  சட்டம்  2012  கொண்டுவரப்படும்  என்று  அறிவித்தபோது  அனைத்துலகச்  சமுதாயம்  அதைப்  பெரிதும்  வரவேற்றது.

“அதனால், அச்சட்டம்  இரத்துச்  செய்யப்படாது  மேலும்  வலுப்படுத்தப்படும்  என்று  மலேசிய  அரசாங்கம்  அறிவித்ததைக் கேட்டு  நாங்களும்  வியப்படைந்து  போனோம்”, என்றவர்  மலேசியாகினியின்  நேர்காணல்  ஒன்றில்  கூறினார்.