பால் லவ்: ‘தவறு, துணை அதிபர் அவர்களே’

paulதேச நிந்தனைச்  சட்டம்  எதிரணிக்  கட்சிகளை  ஒடுக்கும்  நோக்கம்  கொண்டது  என்று  அமெரிக்கத்  துணை  அதிபர்  ஜோ  பிடென்  தெரிவித்துள்ள  கருத்தை  மறுக்கிறார்  பிரதமர்  துறை  அமைச்சர்  பால்  லவ்.

“நாங்கள்  ஒரு  ஜனநாயக  நாடு. இங்கு  மக்கள் சில  வரம்புக்குட்பட்டு  அவர்களின்  கருத்துகளைத்  தெரிவிக்கலாம்”.

தேச  நிந்தனைச்  சட்டத்தைப்  பொருத்தவரை  நாட்டில்  நல்லிணக்கத்தைக்  காக்க  அது  அவசியம்  என  அமைச்சர்  கூறினார்.  அதே  வேளை அதைத்  “தெளிவாக  திருத்தி அமைக்க வேண்டியுள்ளது”  என்பதையும்  அவர்  ஒப்புக்கொண்டார்.

“தேச  நிந்தனைச்  சட்டம்  என்பது  மிகவும்  விரிவானது”, என்றவர்  விளக்கினார்.

பிடென்,  மலேசியா தேச  நிந்தனைச்  சட்டத்தையும்  மற்ற  சட்டங்களையும்  பயன்படுத்தி எதிரணியினரை  ஒடுக்கப்  பார்ப்பது  கவலையளிக்கிறது  என்று  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.