மஇகா அதன் 23 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழுவுக்கும், 3 உதவித் தலைவர்கள் பதவிக்கும் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று சங்கங்களின் பதிவக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சங்கங்கள் பதிவகத்தின் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் கடிதம் ஒன்றை மஇகாவின் தலைமைச் செயலாளர் எ.பிரகாஷ் ராவிடம் நேற்று மாலை மணி 6.30 அளவில் கொடுத்தனர்.
இவ்விவகாரம் சம்பந்தமாக பிரகாஷ் ராவ் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தை மஇகா தலைமையகத்தில் நடத்தவிருக்கிறார்.
சரியான தீர்ப்பு.
மா இ கா மாநாடு எப்படி நடக்கும்?
மாற்றம் வரட்டும்..தேசிய முன்னணி இன்னும் வலு பெறட்டும்.
இந்த மறு தேர்தலால் சமுதாய ஓலம் தீரபோவதிலை. பேசியே ஏமாத்திய சாமி ஒரு பேசா சாமியை வைத்து சென்றார். இப்போது பேசுகின்றவர்கள் பதவி வந்ததும் பேச மாட்டார்கள். தலைவர் பதவிக்கு போட்டி இல்லை என்று ROS சொன்னதும் வேடிக்கைதான். தேர்த்தல் ஓட்டையா போனது அந்த தலைவர் பதவிக்கு போட்டி இல்லாமல் போனதால்தானே?
எதிர்ப்பவர்கள் நோக்கம் என்ன ? தலைவர் பதவி கோளறுதானே! துணை தலைவர் சாமானியர். உதவி தலைவர்கள் போராட்டம் …மதிய செயலவை தேர்வு குளறுபடிகள். இதை எல்லாம் முடுச்சு போட்டு அமுக்கி விட்டு தெளிவா சுதந்திரமா ஒரு புதிய மனுதாக்கல்
மறு தேர்வு ம இ காவை காப்பாற்றும். இனம் யோசிக்கும் நல்லதே நடக்கும்.இல்லையேல் மீண்டும் காற்றில் பறக்கும்.
அமாம் ஜன நாயக ம இ கா என்று ஒன்று உள்ளதே அதுக்கு ஒரு தேர்தலும் இல்லையா? அது என்ன ஜனநாயகம்?
சாமிவேலு தலைமைத்துவத்தில் மஇகா மீது பல புகார் செய்தும்
தூங்கி கொண்டிருந்த சங்க பதிவு அலுவலகம், பழனிவேலு தலைமைத்துவத்தில் மஇகா மீது கொடுத்த புகாருக்கு உடனே
விழித்து கொண்டதை பார்த்தால், சாமிவேலு பலமானவர் ! பழனிவேலு பலவீனமானவர் ! என்றல்லவா அர்த்தம் ஆகிறது.
பாஹங் சுல்தான் போட்ட போடுல துண்டை காணோம் துணியை காணோம்ன்னு இருக்கிற இந்த நேரத்துலே, சங்க பதிவு அலுவலகமும் அவரையே நோண்டுது.
வேதனைக்குரிய சுயநலவாதிகளின் தோல்வியும் வெற்றியும் ….. மலேசிய இந்தியர்களின் ஒற்றுமையின் வெளிப்பாடு …..
இதை சொல்வதற்கு இவ்வளவு நாளா?. மீண்டும் ம.இ.க. பிரதிநிதிகளுக்கு அடிச்சுதடா அதிர்ஷ்டம். இப்பவே கை அறிக்குமே. சொஞ்சம் பொறுத்துக்குங்க. வீடு தேடி வந்து கையிலே துணித்து விட்டுச் செல்வார்கள் பினாமிகள். அப்புறம் என்ன பணம் படைத்தவன் பாடுதான். ஏழை வேட்பாளர்கள் எல்லாம் வெற்றியைப் பற்றி கனவு காணாதீர்கள். யார் யார் என்ன சாதி என்ற அறிக்கை கூடிய விரைவில் வெளியிடப்படும். காத்திருங்கள். அப்புறம் என்ன நம்ம சாதிக் காரங்களுக்கு ஒட்டு போடுன்னு வரப் போறாங்க. இப்படியே போனா உருப்படுமா இந்த கட்சி?.
பணமென்றால் பிணமும் வாயைத்திறக்கும் என்பர். இதில் கட்சிக்காரர்கள் என்ன விதிவிலக்கா??? குறைந்தது “சாகுஹத்தி” நம்பராவது அடிக்கும்…என்ஜோய்!!!!!
மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சித் தேர்தலில் ஏமாற்று வேலையா? அந்தோ பரிதாபம் நம் இந்தியர்கள். நன்கு தெரிந்தவர் ஊடே இப்படி ஏமாற்று வேலை செய்து , பதவியைப் பறித்தால், அறியா எம்மைப்போன்றோரின் கதி அதோ கதி தானோ? நடக்கவிருக்கும் தேர்தலாவது தூய்மையாக நடக்குமா அல்லது மீண்டும் ஒரு முறை சங்கப் பதிவிலாகாவிற்குச் செல்லுமா? ஓட்டுப் போட்டவர்கள்தான் ஓட்டுப்போடுவார்கள். அவர்கள் மீண்டும் ஓட்டுப் போடும் சாத்தியத்தை ஏற்படுத்தாமல் இருந்தால் நன்று. பணப் புலக்கம் இருக்கும் என்று கூறுகிறார்களே உண்மையா? அப்படியாயின் இரண்டாவது போனஸ் என்றுதான் சொல்ல வேண்டும். ம்ம்ம்ம்ம்…….
பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். இருக்கட்டும். கொள்ளையடித்த பணம் இப்படியாவது போய் சேரட்டும். ஆனால் இப்போது பயங்கரமான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் கொள்ளையடிக்க வேண்டும் அல்லவா! ஆக, ம.இ.கா. சேவையை மறந்து நீண்ட நாள் ஆகிவிட்டது!
இதுவாவது நல்லபடியாக நடக்கட்டும்
ம.இ.கா.வில் எத்துனை மறுதேர்தல் நடந்தாலும் எந்த மாற்றமும் , மறுமலர்ச்சியும் வரப்போவதில்லை. மக்கள் மன்றத்தில் அது வலுவிழந்து நீண்ட நாட்களாகிவிட்டது. வரக்கூடிய நாட்டின் பொது தேர்தலில் இருகக்கூடிய நான்கு தொகுதிகளை காப்பாத்திக் கொண்டாலே போதுமானது..?
எது எப்படியாயினும் ம.இ.க. மீண்டும் எழுந்து பீடு நடை போடவேண்டும் என்று வாழ்த்துவோம்.
மறு தேர்தல் நடத்தினாலும் 2008-இல் நடந்த விபத்தில் கோமா நிலைக்கு ஆளான MIC. சுய நினைவு பெறுமா?
mic சரிவு……
சாமியே காரணம்..!
எது எப்படி நடந்தாலும் சமுதாயம் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க
மறு தேர்தல் துணை புரியும் என்று நம்புவோம்.
MIC இல்லமால் இருந்தால் தமிழனுக்கு கோடி நன்மை……………………………………………
பழனிவேலு உளுட்டப்பம் கொடுப்பார் பஸ் புடிச்சு வரவேற்க வாங்கனு அண்மையில் உண்மையாகவே ஒரு அறிக்கை வெளிவந்ததை நினைத்து நினைத்து சிரிப்பு தாங்க முடிலப்பா இவனுங்க தேர்தல் நடத்தி தமிழனுக்கு அப்படியே நல்லது செய்து கிளிசிடுவனுங்கடோய்