ரோஸ்மாவைக் கேள்வி கேட்க வழக்குரைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்களாம்: ரபிஸி கூறுகிறார்

rafiziபல இலட்சம்  ரிங்கிட்  பெறுமதியுள்ள  வைர  மோதிரம்  தொடர்பில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  தம்மீது  வழக்கு தொடுப்பதை  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி வரவேற்கிறார்.

மோதிரத்தைச்  சுற்றி  மர்மம்  சூழ்ந்திருப்பதாக  மலேசியாகினியிடம்  தெரிவித்த அவர், “பல  வழக்குரைஞர்கள்  ரோஸ்மாவைக்  குறுக்கு-விசாரணை செய்ய  ஆர்வமாக  இருப்பார்கள்”,  என்றார்.

நஜிப்பும் அவரின்  துணைவியாரும்  அவர்களின்  வழக்குரைஞர்கள்  மூலமாக  தமக்கு  அனுப்பிவைத்த  அறிவிக்கையின்படி  மன்னிப்பு  கேட்கப்போவதில்லை  எனவும்  ரபிஸி  கூறினார்.

“அந்தப் பேச்சுக்கே  இடமில்லை. மன்னிப்பு  கேட்கப்போவதில்லை  என்று  செய்திதாள்களில்  விளம்பரம்  செய்யலாமா  என  யோசித்துக் கொண்டிருக்கிறேன்”, என்றவர்  சொன்னார்.