குறிப்பிட்ட தரவரைவுகளுடன் இரண்டு எரிஉலைகளை உருவாக்கும் குத்தகையைச் சரியாக செய்து முடிக்காத சுமுர் முத்தியாரா நிறுவனத்துக்கு சுற்றுலா அமைச்சின் சுற்றுப்பயணத்தை மேம்படுத்தும் விளம்பரக் குத்தகை வழங்கப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிஉலைகளைக் கட்டும் நிறுவனத்துக்கு விளம்பரத் தொழில் ஒத்து வருமா என செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சுற்றுப்பயண விளம்பரத்துக்கு நிறைய பணம் செலவாகும் என்கிறபோது, இரண்டு சிறுரக எரிஉலைகளைக் குறிப்பிட்ட காலத்தில் கட்டித்தர முடியாத ஒரு நிறுவனத்துக்கு பெரிய சுற்றுலா விளம்பரக் குத்தகை கொடுக்கப்பட்டது ஏன்?” என்றாரவர்.
மேலும், எரி உலைகள் கட்டும் திறனும் நணுக்கமும் சுற்றுலா விளம்பரத்துக்குப் பயன்படுமா என்றும் அவர் வினவினார். விளம்பரத் துறையில் அறிமுகமே இல்லாத ஒரு நிறுவனம் அது என்றும் ஒங் கூறினார்.
பூமிபுத்தராவை அவமதிப்பது தேச நிந்தனை சட்டத்தின் கீழ் வரும்! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்!