பிஎஸ்எம்: பைபிள் மீது இடப்பட்டுள்ள முத்திரைக்காக சிலாங்கூர் மன்னிப்பு கோர வேண்டும்

 

Alkitab1சிலாங்கூர் மாநிலத்தில் பைபிள் விநியோகிப்படுவது பற்றிய சட்டவிதிகளை 30 பைபிள் பிரதிகளில் பதித்ததற்காக சிலாங்கூர் அதிகாரத்தினர் மன்னிப்பு கோர வேண்டும் என்று மலேசிய பைபிள் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பக்கூடாது என்று சிலாங்கூர் மந்திரிபுசார் அஸ்மின் அலி முன்பே கூறியிருந்த போதிலும், அம்மாதிரியான முத்திரை பதிப்புகள் புனித நூலின் “புனிதத்தன்மையக் கெடுப்பதாகும்” என்று பிஎஸ்எம் தலைவர் இங் மூன் ஹிங் கூறினார்.

“முத்திரை பதிக்கப்பட்ட மற்றும் புனிதத்தன்மை கெடுக்கப்பட்ட பைபிள்கள் விநியோகிக்கப்படமாட்டது என்பதுடன் அவை பயன்படுத்தப்படமாட்டாது ஏனென்றால் அவை அரும் பொருட்காட்சிசாலைக்கு மட்டுமே ஏற்றதாகும்”, என்று அவர் கடும் வாசகம் அடங்கிய அறிக்கையில் கூறுகிறார்.