இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின், நேற்றிரவு மலேசிய கால்பந்து ரசிகர்கள் வியட்நாமிய ரசிகர்களைத் தாக்கிக் காயப்படுத்திய சம்பவத்துக்காக பொது மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“வன்செயலில் ஈடுபட்ட கால்பந்து ரசிகர்களோ மலேசிய கால்பந்து சங்கமோ (ஒருவேளை நாளை கேட்கலாம்) மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்பதால் நேற்றிரவு தாக்குதலுக்கு இலக்கான வியட்நாமிய கால்பந்து ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.
“வன்முறையில் ஈடுபட்ட இந்த ரசிகர்கள் மலேசியாவின் பிரதிநிதிகள் அல்லர். பொறுப்பற்ற இந்த முரடர்கள் கூட்டத்தின் செயலுக்காக மலேசியாவின் சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.
போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை ???????? பரவாயில்லை அடித்தவன் இவன் அடி வாங்கியவன் அந்நியன் ……….bravao மலேசியன் sports
தவறுகளை தைரியமாக ஒப்புகொள்வதும் , அதனை திருத்திகொள்வதுதான் வெற்றிக்கான சிறந்த வழிகள். நன்றி கே.ஜே.
அடுத்த நாட்டு காரன் என்றால் மரியாதை அதே ஒரு இந்தியனை அறைந்த பொது எங்கே போனது இந்த மனிப்பு என்ற வார்த்தை ? இந்தியன் என்றால் இளக்காரம் இவனுக்கு .