மகாதிர்: ஒரு வெள்ளையரைப் பிரதமராக்கினால்கூட நல்லாத்தான் இருக்கும்

mahaமலேசிய  விமான  நிறுவனத்  தலைவராக  ஜெர்மானியர்  ஒருவரை  அமர்த்தும்  அரசாங்க  முடிவை  விடாமல்  குறைசொல்லிவரும்   முன்னாள் பிரதமர்  மகாதிர்  முகம்மட்,  மலேசியாவுக்கு  வெள்ளையர்  ஒருவரைப்  பிரதமராக  நியமித்தால்கூட  நன்றாகத்தான்  இருக்கும்  எனக்  கிண்டலடித்துள்ளார்.

“நினைப்பதற்கே  வருத்தமாக  இருக்கிறது. நம்மீது  நமக்கே நம்பிக்கை  இல்லை  என்கிறபோது  ஒரு  நாள்  பிரதமர்  தேவை  என்றால். ஒரு  வெள்ளையரைக்  கொண்டுவரலாம்.  ஏனென்றால், அவர்  நம்மைவிட ‘கெட்டிக்காரராக’  இருப்பார், இல்லையா.

“இப்படிச்  சொல்வதற்காக  மக்கள்  என்மீது  கோபங்கொள்ளலாம். கோபம்  கொள்ளட்டும். இதுதான்  என்  கருத்து”, என  மகாதிர்  புத்ரா ஜெயாவில்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.