பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்துக்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற தாமான் மேடான் சட்டமன்ற உறுபினர் ஹனிசா தல்ஹா, நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்று கூறிவிட்டுத் திரும்பினார்.
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் பெர்மாத்தா திட்டத்துக்கு பட்ஜெட்டில் பெருந் தொகை ஒதுக்கப்பட்டதைக் குறைகூறியிருந்தது பற்றி விசாரிப்பதற்காக போலீசார் அவரை அழைத்திருந்தனர்.
தம் வழக்குரைஞர் ஜி.சிவமலருடன் சென்ற ஹனிசா, போலீசார் தம்மை மாட்டிவிட முயல்வதாகக் கருதியதால் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
“விசாரணை அதிகாரி (ஐஓ) இன்ஸ்பெக்டர் ஹஸ்புல்லா கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்தேன்.
“நீதிமன்றத்தில்தான் சொல்வேன் என்று அவரிடம் தெரிவித்தேன்”, என பிகேஆர் தேசிய மகளிர் பகுதி துணைத் தலைவருமான ஹனிசா கூறினார்.
பழம் நழுவி பாலில் விளுதாற்போல் ….pkr ருக்கு நல்ல விருந்து …….
வைர மோதிரத்தை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் ஹனிசா !
சபாஷ்..! இந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன் .
பெர்மாத்தா விவகாரத்தை அதிமுக்கியமான அரசியல் பண்ண PKR ருக்கு அவள் கிடைத்தது.