பாலியல் செய்திகளையும் படங்களையும் வலைத்தளத்தில் பதிவிடும் அல்வின் டான், சமூக ஆர்வலரான அலி அப்ட் ஜலில் ஆகியோரின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படுவதைக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்தபா இப்ராகிம் உறுதிப்படுத்தினார்.
“டான் பெயரைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து விட்டோம். அலியும் விரைவில் அப்பட்டியலில் இடம்பெறுவார். விரைவில் அவர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்படும்” என்றவர் கூறினார்.
“நீதிமன்றத்தை, இஸ்லாத்தை, ஆட்சியாளர்களை அவமதிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கை. அவர்களுக்கு (டான், அலி) மட்டுமல்ல. எல்லாருக்குமே”, என்றாரவர்.
அப்படியென்றால் மற்ற மதங்களை அவமதிப்பவர்களைத் தாரளாமாக அனுமதிக்கலாம் என்பது தானே அர்த்தம்!
அலியும் அப்பட்டியலில் இடம் பெறுவார் என்று சொல்வார்களே தவிர இடம் பெற்று விட்டார் என்று சொல்லவே மாட்டார்கள் . சில நாடுகளில் 4 திருமணத்தை ஆதரித்து எ இட்ஸ் சை பெருக்குகின்றனர் . அதை பற்றி விவரமாக எழுதினால் தப்பு என்கின்றனர் . நல்ல நாடு டா சாமி
இது வரை மற்ற மதங்களுக்கு மரியாதையை எது?