பக்கத்தான் 14-வது பொதுத் தேர்தல்வரை நிலைத்திருக்குமா என்ற சந்தேகம் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்குக்கே வந்துவிட்டது.
அக்கூட்டணியில் நிலமை சரியில்லை என்பதை ஒப்புக்கொண்ட கிட் சியாங், ஆறு மாதங்களாக அது கூடிப் பேசவே இல்லை என்றார்.
“14வது பொதுத் தேர்தலில் போட்டியிட இந்த முத்தரப்புக் கூட்டணி இருக்குமா என்று என்னைக் கேட்டால், என்னால் பதில் அளிக்க முடியாது ஏனென்றால் எனக்குத் தெரியாது”, என்றாரவர்..
இந்த சீனர்கள் இந்த அளவுக்கு துரநோக்கு சித்தனை உடையவர்களாக இருபதாலே நெருங்க முடியாத உயரத்தை தொட்டுவிட்டனர். நாம் இந்த மாத சம்பளத்தை இந்த மாதம் முடியும் முன்னரே முடித்துவிட்டு கையை பிசைகிறோம்
சீனர்களை நம்ப கூடாது என்று மலாய் காரர்கள் சொல்லுவது சரியாகத்தான் இருக்கிறது …….
கண்டிப்பா புடுகிட்டு போயிரும், ரொம்ப கவலை படாதிங்க உடம்புக்கு ஆகாது, உங்க வயசுக்கு விட்டிலே பேரபிள்ளங்ககுட கண்ணாமுச்சி விளையாடுங்க,
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு, காரியம் நடக்கட்டும் துணிந்து விடு.
வெற்றிலை.பாக்கு.சுண்ணாம்பு.இதில் வெற்றிலையும் pkr.சுண்ணாம்பும்dap வலுவாக உள்ளது.பாக்கு பாஸ் கட்சியின் தலைமை14 வது பொதுத்தேர்தலுக்குள் மாற்றப்பட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம்!
நிகழ்காலமே கவலைக்கிடமாகத் தான் இருக்கிறது! கவலையை விடுங்கள். அடுத்த போதுத் தேர்தல் வரும் போது தற்காலிகக் கூட்டு ஏற்படுத்திக் கொள்ளலாம்!
மு…..ம்களை என்றுமே நம்பமுடியாது- நான் இதை எதிர் பார்த்ததே. இதை பற்றி நான் கருத்து தெரிவித்திருந்தேன் முன்பு.
பாஸ் கட்சியின் நிலைப்பாடு மாநில மந்திரி பெசார் நியமனத்தில் தெளிவாக தெரிந்து விட்டது..? அவர்களில் பாதி பேர் பி.என். பக்கம் போய்விட்டார்கள். தேர்தல் நேரத்தில் கட்சி உடையும். அவர்களில் பக்காதான் பக்கம் வருபவர்களை சேர்த்துக் கொண்டு களத்தில் இறங்க வேண்டியதுதான்..!
பாக்காத்தான் வலுவாக இருக்கவேண்டுமென்றால் பாஸ் கட்சியை பாகாதானிலிருந்து நீக்கிவிடவேண்டும், கூட்டணிக்குள் குழப்பம் விளைவிப்பதுதான் அவர்களின் நோக்கம்.
அப்பனும் மகனும் சேர்ந்து பக்காத்தனை உடைத்து வருவது பெரும்பாலோருக்கு தெரியும். பக்காத்தானை உடைத்தால்தான், அப்பன் மீண்டும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக முடியும். மகனும் தொடர்ந்து முதலமைச்சர் நாற்காலியில் சாகும்வரை உட்கார்ந்திருக்க முடியும். லிம் கிட் சியாங், ஹடி அவாங், அன்வார், இம்மூவரும் ஓய்வு பெற்றால்தான் மக்கள் கூட்டணி உருப்படும்.
நாட்டுக்கு எதிர் கட்சியே தேவை இல்லை,பாரிசானே என்றும்
ஆளட்டும். எல்லோரும் அந்த பொருளில்தான் எழுதுகிறார்கள்.
எதிர்க்கட்சி தேவைதான்,
ஆனால்
சுயநலம் பிடித்த
ஓற்றுமை இல்லாத
தன் போக்கு தனமான தலைவர்
தேர்தலுக்கு மட்டும் கூட்டனி
இப்படி பட்ட எதிர்கட்சியை நம்பி எப்படி ஒட்டு போடுவது.