பிரதமர்: ‘பரஸ்பர மரியாதை’ குறைந்துவிட்டது, அதனால் தேச நிந்தனைச் சட்டம் தேவை

pmமலேசியாவில்  ஜனநாயகம்  “செழிப்பாக” உள்ளதாகக்  கூறிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், இனங்களிடையே  “பரஸ்பர  மரியாதை”  குறைந்துபோனதால்  1948ஆம்  ஆண்டு  தேச  நிந்தனைச்  சட்டத்தை  வைத்துக்கொள்ள  வேண்டியதாயிற்று  என்றார்.

“இனங்களுக்கிடையே  துருவங்கள்போல்  பிரிந்துவாழும்  போக்கு  அதிகரித்து  வரும்போது  நாட்டின்  பாதுகாப்பையும்  நல்லிணக்கத்தையும்  நிலைநிறுத்துவது  எப்படி?”.

நஜிப்  இன்று மாதாந்திர பிரதமர்  துறையின்  அதிகாரிகளைச்  சந்திக்கும்  நிகழ்வில்  பேசினார்.

நாட்டில்  ஜனநாயகத்தையும்  பரஸ்பர  ம்ரியாதையையும்  கடைப்பிடிக்காத  பொறுப்பற்ற  தரப்பினர்  இன்னமும்  இருந்து  லொண்டிருப்பதால்  இப்போதுள்ள  சட்டங்களைத்  தளர்த்துவதற்கில்லை  என்று  அவர்  சொன்னார்.

“அதனால்தான்  தேச  நிந்தனைச்  சட்டத்தை  வைத்திருக்கவும்  வலுப்படுத்தவும்  அரசாங்கம்  முடிவு  செய்தது”, எண்றாரவர்.