கெடாவில் சீனர் சமூகத்தினர் குர்ஆனை எரித்தார்கள் என்று குற்றம்சாட்டிப் பேசிய பாலிங் அம்னோ மகளிர் தலைவர் மஷிடா இப்ராகிமிடம் போலீஸ் நேற்று வாக்குமூலம் பதிவு செய்தது.
டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் 90 நிமிடங்களுக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஏஜெண்டா டெய்லி கூறியிருந்தது.
வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது பற்றி மஷிடா எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டதாகவும் அச்செய்தி மேலும் கூறிற்று.
கெடாவில் உள்ள சீனர்கள் ஒரு வழிபாட்டின்போது குர்ஆனைப் “பக்கம் பக்கமாக” தீயிட்டுக் கொளுத்தியதாக மஷிடா அம்னோ பேராளர் கூட்டத்தில் கூறினார் என மலேசியாகினி நவம்பர் 26-இல் அறிவித்திருந்தது.
சட்டம் அதன் கடமையை செய்யுதே அதுவரை சந்தோசம்,
என்ன இந்த “அறிவாளி’ அப்பொழுதே போலீசில் புகார் செய்ய வில்லை ? கூட்டம் கூடினால் என்ன வேண்டுமானால் பேசலாம் என்பது முட்டாள்களின் செயல். பார்போம் போலிஸ் விசாரணையில் என்ன நடகின்றது என்று ………..
என்ன பெரிதாய் கிழித்துவிட போகிறார்கள் ! எல்லாம் கண் துடைப்புதான் .
…………………………..சிலருக்கு
ஜில்லென்று இருக்குமே !
கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான கோவில்களை உடைத்து, நாங்கள் வணங்கும் சிலைகளை தெருவில் வீசி அவமானப் படுத்தியது இந்த தேசிய முன்னணி அரசு. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதாக பெருமை பேசிக் கொள்ளும் நாங்கள், அந்த ஆட்சியாளர்கள் கொடுக்கும் ‘ஹம்பர்’ வாங்க, நாய்களை போன்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடுகிறோம். ‘கு… ஆ…’ சில கடுதாசிகளை கொளுத்தியதற்காக ஏன் இப்படி அலட்டிக் கொள்ளுகிறீர்கள்?