கீர் தோயோவின் இறுதி முறையீடு: இன்று விசாரணை

khirமுன்னாள்  சிலாங்கூர் மந்திரி  புசார்  டாக்டர்  கீர்  தோயோ,  ஊழல்  குற்றச்சாட்டையும்  ஓராண்டுச் சிறைத்  தண்டனையையும்  தள்ளுபடி செய்யக்  கோரி  செய்துகொண்ட  இறுதி  முறையீடு  இன்று  விசாரணைக்கு  வந்துள்ளது.

ஐந்து  நீதிபதிகளைக்  கொண்ட  குழு  அதை  விசாரிக்கிறது.

2000-இலிருந்து  2008-வரை  சிலாங்கூர்  மந்திரி புசாராக  இருந்த  கீர்,  தம்  பதவியைப்  பயன்படுத்தி ஒரு  நிலத்தையும்  அதில்  இருந்த  வீட்டையும்  சந்தை விலையைவிட  குறைந்த  விலைக்கு  வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அக்குற்றத்துக்காக 2011, டிசம்பர்  23-இல்,   ஷா ஆலம்  உயர்  நீதிமன்றம் அவருக்கு  12-மாதச்  சிறைத்  தண்டனை  விதித்துத்  தீர்ப்பளித்தது.  அவர்  வாங்கிய  சொத்தும்  பறிமுதல்  செய்யப்பட்டது.

கடந்த  ஆண்டு  முறையீட்டு நீதிமன்றம்  அத்தீர்ப்பை  நிலைநிறுத்தியது.

இப்போது கீரின்  இறுதி  முறையீடு  கூட்டரசு  நிதிமன்றத்துக்கு  வந்துள்ளது. இன்று  தீர்ப்பளிக்கப்படுமானால்  கீர்  குற்றச்சாட்டிலிருந்து  விடுதலை  செய்யப்படுவாரா  சிறை  செல்வாரா  என்பது  தெரிந்து  விடும். அப்படிச்  சிறைக்குச்  சென்றால்  சிறை  செல்லும்  இரண்டாவது  சிலாங்கூர்  மந்திரி  புசாராக  அவர்  இருப்பார்.