‘கொலைகார’ வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் விரைந்து வெளியேறுகிறார்கள்

houseமியான்மார்  நாட்டவர்  அடுத்தடுத்து  கொல்லப்பட்டதாக  நம்பப்படும்   ஒரு  வீடு  அங்கிருப்பதால் புக்கிட்  மெர்தாஜாம்,  ஜாலான்  கம்போங்  பிசாங்  இப்போது உலகளவில்  பிரபலமாகி  விட்டது. ஆனால், அங்குள்ளவர்கள்  முடிந்த  விரைவில்  அந்த  இடத்தைவிட்டு  ஓடிவிடத்தான்  விரும்புகிறார்கள்.

“ஆனால், மூட்டை  முடிச்சுகளுடன்  வெளியேறுவதும்  எளிதல்ல. நிறைய  செலவாகும். அதே  நேரத்தில் இங்கு  வாழவும்  பயமாக  இருக்கிறது”, என்று  ஜாலான்  கம்போங்  பிசாங்கில்  வசிக்கும்  இந்தோனேசிய  பெண்ணான  அனி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அடுத்தடுத்து  நிகழ்ந்துள்ள  கொலைகளால்  அப்பகுதியில் உள்ள  மற்றவர்களைப்போல்  அவரும்  வெகுவாக  பாதிக்கப்பட்டிருக்கிறார். அது பற்றிப்  பேசவும்  அஞ்சுகிறார்.

“அதிகம்  பேசினால்  அடுத்த  பலி  நாங்களாகக்கூட  இருக்கலாம்”, என்றாரவர். அனி, ஓராண்டுக்  காலமாக  அவரின்  வங்காளதேசி  கணவருடன்  அங்கு  வாழ்ந்து  வருகிறார்.

கடந்த  வாரம்  அவ்வீட்டைச்  சோதனையிட்ட  போலீசார் நீண்ட  வெட்டுக் கத்திகள்  மூன்றைக்  கண்டெடுத்தனர்.

விசாரணைக்கு  உதவியாக பலர்  தடுத்தும்  வைக்கப்பட்டுள்ளனர். இக்கொலைச்  சம்பவம்  பற்றி  பல  தகவல்கள்  வியாழக்கிழமை  வெளியிடப்படும்  என  பினாங்கு  போலீஸ்  தலைவர்  அப்துல்  ரகிம்  ஹனாபி  கூறியதாக  த  சன்  டெய்லி  அறிவித்துள்ளது.